• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

சிறுகதைப் போட்டி அறிவிப்பு 1😍

SudhaSri

Administrator
Staff member
Jun 16, 2024
426
7
43
india
ஹாய் நட்பூஸ்,

மகளிர் தின நல்வாழ்த்துகள் தோழமைகளே⚘️⚘️⚘️⚘️

More power to us💪💪💪

சைட் பேர் புதுசு. சைட் புதுசு. அப்போ… தெரிஞ்சிருச்சா😍😍


அதேதான்… நம்ம Nectar Novels தளத்துல போட்டி நடக்கப் போகுது. எந்த மாதிரின்னா👇

💖நகைச்சுவை சிறுகதைப் போட்டி💖

எந்தச் சூழலிலும் சிரிப்பை வர வழைக்கும் நபர்களும் நிகழ்வுகளும் நம்மிடையே உண்டு. நீங்க செய்ய வேண்டியது என்னன்னா👇

இதுபோன்ற நகைச்சுவை நிறைந்த சம்பவங்களை, கேரக்டர்களை சிரிப்பு, சிந்தனை, கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி, பகடி என உங்களுக்குப் பிடித்தமான வகையில் நகைச்சுவை ததும்பத் தளும்ப சிறுகதையா எழுதணும். அவ்ளோதான்🤩

கிச்சு கிச்சு மூட்டாமல், குலுங்கிச் சிரிக்க வைக்கும் தரமான முதல் இரண்டு கதைகளுக்குத் தலா ₹2000 மும், தரவரிசையில் அடுத்த மூன்று கதைகளுக்குத் தலா ₹1000 மும் பரிசாக வழங்கப்படும்.

வார்த்தை அளவு : 1000 - 1500

போட்டி நடக்கும் காலம் : மார்ச் 15 - ஏப்ரல் 15

போட்டி முடிவுகள்: மே 1

கதைகளை அனுப்ப வேண்டிய இமெயில்: nectarnovels.ss@gmail.com

முன் பதிவு செய்யத் தேவை இல்லை. No need for registration.

சங்கீதச் சிரிப்பு, சந்தோஷச் சிரிப்பு, சாப்பாட்டுச் சிரிப்பு, அரசியல் சிரிப்பு, அடாவடிச் சிரிப்புன்னு எதா இருந்தாலும் சிரிக்க நாங்க ரெடி, சிரிக்க வைக்க நீங்க ரெடியா?

தள வேறுபாடின்றி சிறுகதையை, நகைச்சுவையை எழுத விரும்பும் யாவரும் போட்டியில் பங்கேற்கலாம். பரிசோதனை முயற்சியாக எழுதிப் பார்க்க விரும்பும் வாசக - எழுத்தாளர்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும்⚘️⚘️⚘️

சிரிச்சா போதும், சில்லறை தேவையில்லை என நினைக்கும் சீனியர் எழுத்தாளர்களை வணங்கி வரவேற்கிறோம்🙏💖

நேரடி, மேலதிக விவரங்கள், விளக்கங்களுக்கு Messengerல் தொடர்பு கொள்ளுங்கள்.

Nectar Novels ல் சிரிப்புத் தேனை சிதற விடுங்க மக்கா😍

நன்றி🙏💖

வேதா விஷால்💙

அனன்யா (Sudha Thirumalai)💙
 

Author: SudhaSri
Article Title: சிறுகதைப் போட்டி அறிவிப்பு 1😍
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Annapurani