• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

எனது சொந்தம் நீ - 15

Annapurani

Member
Mar 27, 2025
38
0
8
15.





நந்து! நந்து! என்று அழைத்தபடி கையில் போட்டிருந்த ட்ரிப்ஸை பிடுங்கி எரிந்துவிட்டு தன் பெட்டிலிருந்து கீழே இறங்கி தட்டுத் தடுமாறி நந்தினியின் பெட்டருகே வந்தார் லிங்கம்!

“நந்தூ! உனக்கென்னாச்சு! உனக்கென்னாச்சும்மா?” என்று கேட்டு நந்தினியின் தோளைப் பற்றினார். அபி அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.

“வந்துட்டீங்களா? என் மேல இருந்த கோவம் போய்டுச்சா?” என்று கேட்டபடி எழுந்து அமர்ந்தாள் நந்தினி!

அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தார் சிவலிங்கம் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட சிவசங்கரன்.

சில நிமிடங்கள் கழித்து நந்தினியை விடுவித்து அபியைப் பார்த்து,

“டாக்டர்! இவளுக்கு என்ன ஆச்சு?”

அப்போது ஹரி உள்ளே வந்தான். அப்பாவைப் பார்த்து அவனுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி, மறுபுறம் கோபம்! உணர்ச்சிகளின் கலவையில் சிக்கித் தவித்தான்.

“ஆனா! நீங்க யார்ன்னு......?” அபி வேண்டுமென்றே கேட்டாள்.

“நான் இவ ஹஸ்பன்ட்! சிவசங்கரன்.”

“என்ன?” என்று அதிர்ந்தார் சந்தர். கூடவே கேட்டார்.

“உங்க வைஃப்பும் சன்னும் ஆக்ஸிடென்ட்ல சாகலையா?”

“ஷட் அப்! நீங்க யார்? என் வைஃப்பும் சன்னும் நல்லபடியா உயிரோட இருக்காங்க! இதோ இவதான் என் வைப்! என் சன் ஸ்கூல் போய்ருக்கான்.” என்றார். இப்போது அனைவரும் அதிர்ந்தனர்.

“அப்பா!” என்று முன்னே வந்து தந்தையை அழைத்தான் ஹரி!

“நான் உங்கப்பா இல்ல. நீங்க யார்?” என்று கேட்டார் சிவசங்கரன்.

“அப்பா! நான்தாம்ப்பா உங்க ஹரி! உங்க பிள்ள!” என்றான்.

சிவசங்கரன் அவனை அதிசயமாய்ப் பார்த்தார்.

“இல்லங்க! என் பையன் ப்ளஸ் டூதான் படிக்கறான். நீங்க எவ்ளோ பெரியவரு. பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. நல்லா வளந்துருக்கீங்க. உங்கப்பாவ உங்களுக்கு அடையாளம் தெரியலையா?”

“அப்பா! உங்களுக்கு என்னாச்சு?” என்று அவரைத் தொட்டு நெஞ்சோடு அணைத்தான் ஹரி. சிவசங்கரனுக்கு இந்த உலகமே சுற்றியது. ஹரியின் அணைப்பில் தன் மகனின் ஸ்பரிசத்தை உணர்ந்தார். அவனை விலக்கி அவன் முகத்தை உற்று நோக்கினார். அவர் கண்களில் ஒளி ஏறியது.

“ஹரீ! நீயா! நீயா! என் ஹரி இவ்ளோ வளந்துட்டானா? என்று அரற்றத் தொடங்கினார். நந்தினியைப் பார்த்தார். இப்போதுதான் அவளுடைய காதோர நரை அவர் கண்ணிலும் கருத்திலும் பதிந்தது! அவள் சைகையாலேயே ஆமாம் என்பது போல தலையசைத்தாள். மீண்டும் ஒரு முறை ஹரியை ஆரத் தழுவிக் கொண்டார்.

அவரை ஆசுவாசப்படுத்தி பெட்டில் படுக்க வைத்தனர்.

சிவசங்கரனையும் நந்தினியையும் சமாதானப்படுத்தி இருவருக்கும் ட்ரிப்ஸை மீண்டும் போட்டுவிட்டாள் அபி.

“இவர் உங்க ப்ரதர்ன்னு சொன்னீங்களே?” என்று சந்தரிடம் கேட்டாள் அபி.

“மேம்! பத்து இல்ல பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால நான் சென்னைக்கு என் வேல விஷயமா வந்திருந்தேன். என் வேல முடிஞ்சி, மும்பைக்கு ட்ரெயின் ஏறிட்டேன். அப்ப ட்ரெயினோட டாய்லெட் பக்கத்தில இவர் ரத்த காயத்தோட படுத்திருந்தார். நந்தினி! ஹரி! அப்டீன்னு சொல்லி புலம்பிகிட்டே இருந்தார். அன்னிக்கு இவர மாதிரியே நிறைய பேர் ரத்த காயத்தோட ட்ரெயின்ல இருந்தாங்க. ஸ்டேஷன் வர வழியில எதோ ஆக்ஸிடென்ட் போல. நிறைய பேர் அந்த ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க! அதுல தப்பிச்சவங்க அப்ப வந்த ட்ரெயின்ல ஏறி அவங்கவங்க சொந்த ஊருக்கு போனாங்க. இவரும் அப்டிதான் வரார்ன்னு நெனச்சேன். ஆனா மும்பை ரயில்வே ஸ்டேஷன்ல இவர் இறங்கல. மயக்கமாவே இருந்தார். அதுனால இவர நான் என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் வைத்தியம் பாத்தேன். இவருக்கு தான் யார்னே மறந்துடுச்சு. ஆனா இவர் திரும்பத் திரும்ப நந்தினி! ஹரின்னு ரெண்டு பேரதான் சொல்லிகிட்டே இருப்பார்! நந்தினியும் ஹரியும் இவருக்கு உறவா இருக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். அவங்க இறந்தத கண்ணால பாத்ததுனனால இவர் இப்படி ஆய்ட்டார்னு நெனச்சுகிட்டேன். இவர குணப்படுத்தனும்னு ஒரு பொண்ண இவர்கிட்ட அனுப்பி உங்க நந்தினி வந்திருக்கான்னு சொன்னேன்.

இவர் அவளப் பாத்து,

“உன் பேர் வேண்ணா நந்தினியா இருக்கலாம். ஆனா நீ என் நந்தினி இல்ல!"

அப்டீன்னு சொன்னார். அதுக்கப்புறம் நாங்க இவர தொந்திரவு செய்யல. சாப்டவே மாட்டார். என் மனைவி சீமா, நந்தினிதான் இத உங்களுக்காக செஞ்சு குடுத்தா அப்டீன்னு சொல்லுவா. அப்டி சொன்னாதான் இவர் கொஞ்சமாவது சாப்பிடுவார். எதாவது வேல சொன்னா செய்ய மாட்டார். ஹரி ஸ்கூல் ப்ராஜெக்ட்க்காக செய்யச் சொல்லியிருக்காங்கன்னு சொன்னா முழுசா செஞ்சு முடிச்சிருவார்! அப்டிதான் ஒரு வாட்டி இவரோட ஆங்கில அறிவப் பத்தி புரிஞ்சுகிட்டு இவர ஒரு ஆர்டிகல் எழுத வெச்சோம். அற்புதமா எழுதினார். நான் ஒரு ஜெர்னலிஸ்ட். அதனால இவர நான் வேல பண்ற பத்திரிகை ஆஃபீஸ்ல வேலைக்கு சேத்து விட்டேன். அங்கயும் ஹரி செய்யச் சொன்னான் அப்டீன்னா எல்லாத்தையும் பக்காவா செய்துடுவார். அவர என் ப்ரதராவே ஏத்துகிட்டேன்!” என்று முடித்தார் சந்தர்.

“இவரோட பேரு சிவலிங்கம்னு....?” - அபி.

“எங்க ஆஃபீஸ்ல ஒரு சிவலிங்கம் படம் இருக்கும். இவர் எப்பவுமே அத வணங்கிட்டுதான் தன் வேலையை ஆரம்பிப்பார். அதனால இவர அப்டியே கூப்ட ஆரமிச்சுட்டோம்.” என்றார் சந்தர்.

நந்தினியும் ஹரியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

சிவசங்கரனுக்கு இப்போது சந்தரைப் பற்றிய நினைவும் வந்தது.

“இன்னிக்கு டேட் என்ன?” என்றார் சிவசங்கரன்.

ஹரி சொன்னான்.

சிவசங்கரன் புரிந்து கொண்டு தனக்கு என்ன ஆனது என்று சொல்ல ஆரம்பித்தார்.

“அன்னிக்கு ஹரி ஸ்கூலுக்கு கிளம்பினப்றம் நானும் நந்தினியும் சண்டை போட்டுகிட்டோம். இனிமே நீ எனக்கு வேண்டாம்டீ. ஒரு பொம்பளத் துணையில்லாம வாழ்ந்து காட்றேன்னு கோவப்பட்டு அவகிட்ட கோவிச்சுகிட்டு கிளம்பிட்டேன். என்ன அவ கண்டு பிடிக்கக் கூடாதுன்னு என் ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ் போர்ட், எதுவும் எடுத்துக்கல. கிளம்பி சென்ட்ரல் ஸ்டேஷன் போய் மும்பைக்கு டிக்கெட் எடுத்துகிட்டு உக்காந்துட்டேன். அப்றம்தான் அவ இல்லன்னா வாழ்க்கை எப்டி ரணகளமா இருக்கும்னு புரிஞ்சுது. ஹரியையும் நந்தினியையும் பாக்காம எப்டி இருப்பேன்னு நெனச்சேன். அப்பதான் அந்த ஆக்ஸிடென்ட். ஒரு பஸ், சென்ட்ரல் ஸ்டேஷன்க்குள்ள ஏடாகூடமா மோதிருச்சு! அதனால எனக்கும் அடி பட்டிருச்சு. காயம் பலமா இருந்தாலும் நினைவு போகாமதான் இருந்தேன். ஆனா என்ன ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு போறச்சே லேம்ப் போஸ்ட்ல மோதி மயக்கமாய்ட்டேன். அதுக்கப்புறம் எதுவும் என் நினைவுல இல்ல. என் பேக்கெட்ல இருந்த மும்பை டிக்கெட்ட பாத்து மும்பை போற ட்ரெயின்ல என்ன ஏத்தி விட்டுட்டாங்க போலிருக்கு!” என்றார் சிவசங்கரன்.

நந்தினி இவர் தன்னிலை மறந்த நிலைலயும் என்னதான் நெனச்சுகிட்டு இருந்திருக்கார் என்று பெருமிதமாய் உணர்ந்தாள். ஹரியும் அப்பா என்ன மறக்கல என்று நினைத்துக் கொண்டான்.

ஹரி, சந்தரிடம் நன்றி கூறினான்!

"எங்கப்பாவை காப்பாத்தி பத்திரமா பாத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்!"

"என்ன தம்பி... நன்றின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க.... என் மனைவிக்கு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா...." என்று கூறி தன் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீரை துடைத்துக் கொண்டார்! தன் மனைவியிடம் இந்த நல்ல விஷயத்தைக் கூற தன் கைப்பேசியுடன் வெளியே சென்றார்!

“சரி! ரொம்ப நேரம் பேசிட்டீங்க. இப்ப ரெண்டு பேரும் தூங்குங்க.” என்றாள் அபி.

“சரி டாக்டர்!” என்றார் சிவசங்கரன்.

நந்தினி, அபியை தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்!

“இவ ஹரியோட மனைவி! நம்ம மருமகள்! டாக்டர் அபிநயா!” என்று கூறினாள் நந்தினி.

“ரொம்ப சந்தோஷம்! வாழ்க வளமுடன்!” என்று வாயார வாழ்த்தினார்.

“அத்த! அப்போ நாளைக்கு ஆபரேஷன் பண்ணிடலாமா?”

“ஆமா அபிம்மா! பண்ணிடலாம்!” என்றாள் நந்தினி.

"டாக்டர்! நா எங்கம்மாவையும் அப்பாவையும் வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்!" என்றான் ஹரி!

அபியும் நந்தினியும் அதிர்த்தனர்! சிவசங்கரன் குழப்பமாய் மகனை பார்த்தார்!

"என்ன சொல்றீங்க! அத்தையோட உடம்பு கண்டிஷனுக்கு இப்ப அவங்கள எங்கியும் அனுப்ப முடியாது!" என்றாள் அபி! இதைச் சொல்லும்போது அவள் கண்கள் குளம் கட்டிவிட்டது!

"என்னடா சொல்ற?" நந்தினி கேட்டாள்!

"எங்கம்மாவுக்கு இந்த ஹாஸ்பிடல்ல வைத்தியம் செஞ்சுக்க எனக்கு இஷ்டமில்ல! நா அவங்கள வேற ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்!" என்றான் ஹரி கோபமாக!

"நாளைக்கு ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணினப்பறம் ஏன் இப்டி சொல்றீங்க? இப்ப அவங்கள இங்கேந்து கூட்டிட்டு போனா அவங்க ஹார்ட் கண்டிஷனுக்கு ரொம்ப க்ரிட்டிக்கல் ஆயிடும்! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க!"

"ஓகே! இதே ஹாஸ்பிடல்ல எங்கம்மாவுக்கு நாளைக்கே ஆபரேஷன் நடக்கட்டும்! ஆனா நீ எங்கம்மாவுக்கு எதுவும் பண்ண கூடாது! நீ இந்த ரூம்லேந்து வெளிய போ!" என்றான் மிகக் கடுமையான குரலில்!

"ஆனா..." என்று அபி எதையோ சொல்ல வந்தாள்!

ஹரி தன் கையை உயர்த்தி அவளை நிறுத்திவிட்டு,

"உன் மாமியார் பொழைக்கறதும் பொழைக்காததும் உன் கைல தான் இருக்கு! நீயே முடிவு பண்ணிக்கோ!" என்றான்!

"என்னடா இதெல்லாம்..." நந்தினி மீண்டும் ஹரியிடம் கேட்க,

"நீங்க பேசாம இருங்கமா!" என்று அவளிடமும் கடுமையாகக் கூறிவிட்டு, அபியை கோபமாகப் பார்க்க, நந்தினிக்கு படபடவென்று வந்தது!

"சரி! நா போறேன்!" என்று அங்கிருந்து வாசலை நோக்கி நகர,

"அபிம்மா..."நந்தினி மிக மிக வேதனையோடு அழைத்தாள்!

"ஒரே ஒரு நிமிஷம்! ப்ளீஸ்!" என்று ஹரியிடம் சொல்லிவிட்டு, நந்தினியிடம் வந்தாள்!

"அத்த! ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க! இங்க சிஸ்டர்ஸ் எல்லாம் நல்ல எக்ஸ்பீரியன்ஸ்டு.... அதனால பயப்பட ஒண்ணுமில்ல! நாளைக்கு எங்க சீஃப் டாக்டர் தான் உங்களுக்கு ஆபரேஷன் பண்ணுவார்! தைரியமா இருங்க அத்த!"

"ஆனா.... நீ என் பக்கத்தில...." என்று நந்தினி கூற,

"நா ஃபிசிக்கலா உங்க பக்கத்தில இல்லன்னாலும் என் நெனப்பு முழுசும் உங்கள சுத்திதான் இருக்கும் அத்த! நோ வொரீஸ்...." என்று தன் மாமியாரை தேற்றிவிட்டு, அங்கிருந்த நர்ஸுகளிடம் தேவையான குறிப்புகளை கூறிவிட்டு, தன் மாமனாரிடம் தலையசைத்து விடை பெற்றுக்கொண்டு கனத்த மனதுடன் அந்த அறையை விட்டு வெளியேறினாள்!





தொடரும்....


 

Author: Annapurani
Article Title: எனது சொந்தம் நீ - 15
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.