• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

அத்தியாயம் -10

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
அத்தியாயம் - 10

இராமேஸ்வரம் அரண்மனை. மாலை நேர மாலை மயங்கும் நேரம் அக்கினி தீர்த்தக் கரையை மறைத்தவாறு வளர்ந்துள்ள தென்னந்தோப்பின் இளங்குருத்துகளை தழுவி குளிர்ச்சியையும் மென்மையையும் எடுத்து வந்தது தென்றல்.

தமது உட்பரிகையில் அமர்ந்தவாறு தெற்கு கடலை கவனித்துக் கொண்டிருந்தார் சேதுபதி மன்னரைத் தழுவிச் சென்றது அந்தத் தென்றல். வங்கக்கடலின் அந்த விரிந்த பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த நுரைகளுடன் கூடிய திரைகள் ஒன்றின் மின் ஒன்றாக வந்து கரையின் குறுமணலைத் தொட்டு திரும்பிச் செல்வது சிறுபிள்ளை விளையாட்டு போல அவரது சிந்தனையை ஈர்த்தது.

மன்னரது மனத்திரையிலும் இது போன்று எத்தனையோ சிந்தனைகள் வந்து போயின. இரண்டு மாத கால இடைவெளியில் எத்தனை எத்தனை நிகழ்ச்சிகள், மதுரை பேரரசர் திருமலை நாயக்கர் உதவி வேண்டி அழைத்தது, பல்லாயிரம் மறவர்களை திரட்டி மதுரை சென்றது, கன்னட படைகளைப் போரில் துவம்சம் செய்து வெற்றி வாகை சூடியது, திருமலை நாயக்கர் அளித்த பாராட்டுக்கள் பரிசில்கள் விருந்துகள் என அனைத்தும் மன்னரது மனதில் கனிந்து கொண்டிருந்தது

சற்று முன்னர்‌ நடந்தது போன்று தோன்றிய அந்த நிகழ்ச்சியில்‌ லயித்து இருந்த மன்னரது மனத்தை,

"சமுகத்திற்கு நமஸ்காரம்‌" அரண்மனைக்‌ கார்வாரின் வழக்கமான குரல்‌ இராமேஸ்வரம்‌ நடப்பிற்கு கொணர்ந்தது.

"உம்‌... என்ன செய்தி?"

"மகாராஜா ராஜராஜேஸ்வரி கோயில்‌ குருக்கள்‌ வ்ந்து இருக்கிறார்‌” முறைப்படி நடத்தி வைப்பதற்காக இராமேசுவரத்தில்‌ இருந்த சங்கர குருக்களைத்‌ தேர்வு செய்து நியமனம்‌ செய்திருந்தார் சேதுபதி மன்னர். அவர் தான் தற்போது மன்னரப் பார்ப்பதற்காக வந்திருந்தார்.

"அவரை இருக்கையில் அமரச் சொல்‌" என்ற மன்னரின் பதிலில்,
"உத்தரவு" என்று கார்வார்‌ கீழ சென்றார்‌.

சேதுபதி மன்னர்‌ எழுந்து உடைகளைக் கண்ணாடியில்‌ சரி பார்த்து அணிந்து கொண்டு, படிக்கட்டு வழியில்‌ மெதுவாக இறங்கி வந்தார்‌. மன்னர்‌ வருவதைக்‌ கண்ட கோயில்‌ ஸ்தானிகமும்‌, குருக்களும்‌, பிரதானியும்‌, மன்னருக்கு. வணக்கம்‌ செலுத்தினர்‌.

அங்கிருந்த இருக்கையில்‌ அமர்ந்த மன்னர்‌,
"நவராத்திரி விழா பட்டியல்‌ தயாரிக்கப்‌ பட்டுவிட்டதா?" என வினவினார்.

"ஆம்‌ மகாராஜா! பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்குத் தேவையான அனைத்துப்‌ பொருட்களின்‌ பட்டியலை பிரதானி அவர்களிடம்‌ கொடுத்து இருக்கிறேன்‌."'

"சரி. அவைகளை அவர்‌ சேகரித்து வைத்துவிடுவார்‌. தங்களுக்கு உற்சவ காலத்தில்‌ உதவ அத்யாயன பட்டர்கள்‌ வேண்டுமல்லவா? மதுரையில்‌ இருந்து வரவழைக்கலாமா?”

"தேவையில்லை மகாராஜா. நமது இராமநாதபுரம்‌ சொக்கநாதர்‌ கோயிலில்‌ இருந்தே அழைத்துக்‌ கொள்ளலாம்‌"

“அப்படியெனில் சரி..”

"நாங்கள்‌ நாளை இராமநாதபுரம்‌ புறப்படுகிறோம்‌. மகாராஜா எப்பொழுது இராமதாதபுரம்‌ கோட்டைக்கு வருவீர்கள்?”

“இந்த மாதத்திலேயே அங்கு வந்து விடுவேன்.”

“அப்படியானால் உற்சவத்தை ஒட்டி நடைபெறும் மற்ற விஷயங்களை ஆரம்பித்து விடலாம் அல்லவா?”

“அப்படியே செய்யுங்கள்!”

“நல்லது மகாராஜா. நான் விடைபெற்றுக் கொள்கிறேன்” என்று கோவில் குருக்கள் விடைபெற்றுச் சென்றார்.

“வேறு செய்திகள் உண்டா?” என்று பிரதானியிடம் வினவினார் மன்னர்.
“இல்லை மகாராஜா” என்று பிரதானி சொல்லிக் கொண்டிருந்த போது சாயரட்சைக்கான மணி ஒலித்தது. மன்னரும் பிரதானியும் கோவிலுக்குச் சென்றனர்.

******************

விடுதியின்‌ நடுக்‌ கூடத்திற்கு வந்து திண்டு மெத்தையில்‌ அமர்ந்த போது திண்ணையில்‌ பிரதானி நின்று கொண்டிருப்பதைக்‌ கண்டார். மன்னரைக் கண்டவுடன் பிரதானி அவர் அருகில் வந்தார்.

"நேரமாகிறதே இன்னும்‌ சாப்பிடச்‌ செல்லவில்லையா? முக்கியத் தகவல்கள் ஏதும்‌ இருக்கின்றனவா?" என்று வினவினார் மன்னர்.

"சில செய்திகள்‌ கிடைத்தன மகாராஜா. தங்களிடம் கூறிவிட்டு உணவருந்தச் செல்கிறேன்” என்றார் பிரதானி.

"இராமேஸ்வரம்‌ திருப்பணி நிறைவு விழாவில்‌ திருமலை நாயக்கர் கலந்து கொள்ள இயலாதாம். பயணம்‌ மேற்கொள்ளும்‌ வகையில்‌ அவரது உடல்‌ தலம்‌ இல்லையாம்‌. மதுரையில் இருந்து கலைஞர்களை அழைத்துக் கொள்வதில் எவ்வித ஆட்சேபனையும்‌ இல்லையென்று தெரிவித்து இருக்கிறார்‌. மற்றும்‌...."' என்று பிரதானி தொடர்வதற்குள்‌ மன்னர் இடையிட்டார்.

"மதுரை மன்னரது இப்பதில்‌ எதிர்பார்த்ததுதான. ஆனால்‌ அவரது உடல்‌ நலிவு பற்றி அறியும் போது மனத்திற்குவேதனையாக இருக்கிறது. கோவில்‌ விழா முடிந்ததும்‌ அவசியம்‌.மதுரை சென்று அவரைப்‌ பார்த்து வர வேண்டும்‌. வேறு ஏதேனும் செய்திகள்‌ உண்டா?”

பிரதானி சொன்னார்‌, "திருச்சுழியல் விழாவின்‌ பொழுது கண்டெடுக்கப்பட்ட
கட்டாரியின்‌ சொந்தக்காரர்‌ பற்றிய உறுதியான தகவல்‌ எதுவும்‌ கிடைக்கவில்லை. விழாவின்‌ பொழுது வீண்‌ குழப்பம்‌ செய்த அந்த ஆளைத்‌ துரத்திச்‌ சென்ற நமது சேவகர்களில்‌ இருவர்‌ அவனை ஏற்கனவே உப்பூர்‌ சத்திரத்தில்‌ பார்த்த ஞாபகம்‌ இருப்பதாகத்‌ தெரிவித்துள்ளார்‌. ஆதலால்‌ அத்த ஆள்‌ ராஜசிங்க மங்கலம்‌ அல்லது. அஞ்சுக்கோட்டைச்‌ சீமையைச்‌ சேர்ந்தவனாக இருக்கலாம்‌ என்ற யூகத்தில்‌ நடவடிக்கை தொடரப்பட்டுள்ளன.”

"என்ன நடவடிக்கை அது?"

"அந்த சீமை நாட்டுத்‌ தலைவர்களுக்கு ஓலைகள்‌அனுப்பி இருக்கிறேன்‌. அந்தப்‌ பகுதிகளில்‌ நமது அரசுக்கு எதிராககருத்துத்‌ தெரிவிப்பவர்கள்‌, அல்லது பொது இடங்களில்‌ அரசுநடவடிக்கைகளுக்கு விரோதமாக விமர்சிப்பவர்களைக்‌ கண்காணித்துவிரைவில்‌ தகவல்கள்‌ அனுப்புமாறு எழுதி இருக்கிறேன்‌."

"நல்லது. அவர்களது தகவல்களுக்கு காத்து இராமல்‌ அவர்களை நாம்‌ அழைத்துப்‌ பேசினால்‌ என்ன? அவர்கள்‌ எத்தனை பேர்?" என மன்னர்‌ கேட்டார்‌.

சில வினாடிகள்‌ யோசித்த பிரதானி சொன்னார்‌, "மஹராஜா! அவர்கள்‌ மொத்தம்‌ பத்து நாடாள்வார்கள்‌, அஞ்சுக்கோட்டை, அனுமந்தன்குடி, தாழையூர்‌, இடையளநாடு, அறுதூத்தி மங்கலம்‌, ராஜசிங்க மங்கலம்‌, தென்னாலை தாடு, காளையார்‌ கோவில்‌, தாலுக்கோட்டை, அதளையூர்‌ நாடுகளைச்‌ சேர்ந்தவர்கள்‌."

"அவர்களை வருகின்ற பவுர்ணமியன்று சேதுக்கரைச்‌ சத்திரத்திற்கு வத்து சந்திக்குமாறு உடனே ஓலை அனுப்புங்கள்‌"

"மகாராஜா உத்தரவு"

அடுத்து மன்னர்‌ ராமுத் தேவனை அழைத்தார்‌. ராமுத்‌ தேவன்‌ வெற்றிலைத்‌ தட்டுடன்‌ வந்து வணங்கிவிட்டு, தட்டை மன்னர்‌ முன்‌ பணிவுடன்‌ வைத்தான்‌.

வேறு உத்தரவு எதுவும்‌ மன்னரிடமிருந்து இல்லாததால்‌ பிரதானி மன்னரை வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்‌.

மன்னர்‌ வெற்றிலைத்‌ தட்டில்‌ இருந்த வெற்றிலைச்‌சுருள்‌ ஒன்றை எடுத்து வாயில்‌ வைத்து மென்று சுவைத்துக்‌ கொண்டிருந்தார்‌. அவர்‌ விரைவில்‌ உறங்கிவிடுவார்‌ என்பது அவனுக்குத்‌ தெரியம்‌.

மன்னர்‌ உறங்குவதற்கு ஏதுவாக படுக்கை விரிப்புகளைச்‌ சரி செய்ய படுக்கை அறைக்குள்‌ சென்றான்‌ ராமுத்‌ தேவன்‌.
வைகறையில்‌ இராமதாதபுரத்திற்குத் திரும்பவேண்டுமல்லவா?

*************
புரட்டாசி மாதம் அமாவாசையில் தொடங்கிய நவராத்திரி பத்துநாள்‌ உற்சவமாகக் கொண்டாடப் பட்டது.

இராமநாதபுரம் கோட்டைக்குள் இருந்த கோவில் விழா என்பதால் கோட்டை முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது. விழாவில் பல நிகழ்வுகள் நடந்தேறின.
விழா ஆரம்பித்த முதல் நாளில் மன்னர்‌ சடங்குகளுக்கு தம்மை ஆயத்தம்‌ செய்து கொண்டார். இது வாபன சடங்கு என்றழைக்கப்பட்டது.
அடுத்ததாக அம்மனுக்கு மங்கல நீராட்டு நடைபெற்றது
சேது பீடத்திற்கு பூஜை நடைபெற்றது
கலசஸ்தாபனம்‌ என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் ராஜராஜேஸ்வரியின் திருமேனியும்‌ மரகத பீடமும்‌ விழாப்‌ பந்தலுக்கு பவனியாக எடுத்து வரப்பட்டது
திருவிழாவை நடத்தி வைப்பவர் என்ற முறையில் சேதுபதி மன்னர் காப்பு கட்டிக் கொண்டு வழிபாடு செய்தார்.
பிற்பகலில்‌ பீரங்கி முழக்கத்துடன் பேரிகைகள் கொட்ட தேவதாசிகள்‌, நாதசுவர வித்வான்கள்‌, இசை, நாட்டியக்காரர்‌, சிப்பாய்கள்‌, அலுவலர்கள்‌, விருந்தாளிகள்‌ ஆகியோருக்கு சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவற்றை அவையில் இருந்த கொலு மண்டபத்தில் வீற்றிருந்த படியே மன்னர் கண்டு களித்தார்.
அதன் பின்னர் சாயங்கால பூசை, இரவு பூசைகள் ஆரம்பித்து தூப, தீப, நைவேத்தியம்‌ எல்லாம் நடந்த பிறகு தாம்பூலம்‌ மற்றும் கர்ப்‌பூர ஆரத்தியோடு நிறைவு பெற்றது. பூஜைகளில் மன்னரோடு அனைத்து குடிமக்களுக்கும் கலந்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருந்தது.
இறுதியாக இரவில்‌, மன்னர்‌ அவையில் கொலுவீற்று இருக்க கலைஞர்கள்‌, புலவர்கள்‌ கலைப்படைப்புகளை அரங்கேற்றுவார்கள். அவர்களுக்கு மன்னர்‌‌ பரிசுகளும்‌ பாராட்டும்‌ வழங்கிச் சிறப்பிப்பார்.

இத்தகைய நிகழ்ச்சிகள்‌ ஒன்பது நாட்கள்‌ தொடர்ந்து நடைபெற்ற பிறகு பத்தாவது நாள்‌ அன்று பிற்பகலில்‌ சேதுபதிமன்னர்‌ அலங்கரிக்கப்பட்ட பட்டத்து யானையில்‌ பவனி வருவார். கோட்டைக்கு வெளியே ஒருகல்‌ தொலைவில்‌ உள்ள பொட்டலில்‌, ஏனைய திருக்கோயில்களில்‌ இருந்து அங்கு எழுந்தருளிய தெய்வத்‌ திருமேனிகளை தரிசித்து விட்டு அம்பிகை ராஜராஜேஸ்வரியின்‌ தொண்டனாக நான்கு திசைகளிலும்‌ அம்புகளை செலுத்தி தீயவை ஓடி ஒளியும்படி செய்‌வார். பின்னர் வாணவேடிக்கைகளைக்‌ கண்டு களித்து அரண்மனைக்‌குத்‌ திரும்புவது மன்னரின் வழக்கம்‌. இந்த பத்தாவது நாள்‌ கொலு தசரா திருவிழாவில்‌ இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்றது.



********
இராமதாதபுரம்‌ கோட்டை

நீராவி அரண்மனையிண்‌ முகப்பில்‌ இடதுபுறம்‌ அமைந்திருந்த அறைக்கு மன்னர் வந்த பொழுது அங்கே, பிரதானியுடன்‌ கார்வார்‌, தானாதிபதி மற்றும்‌ அரண்மனை ஊழியர்‌ சிலர்‌ காத்து இருந்தனர்‌. அவர்களின்‌ மரியாதையைப் பெற்றுக்‌ கொண்ட மன்னர்‌, அங்கு நடுக்கூடத்தில்‌ இருந்த அவரது இருக்கையில்‌
அமர்ந்தார்‌.

"பிரதானியாரே! நமது நவராத்திரி விழா மிகச்‌ சிறப்பாக அமைந்து விட்டதாக சில விருந்தினர்கள்‌ என்னிடம்‌ மகிழ்ச்சியடன்‌ தெரிவித்தனர்‌. அவர்கள்‌ நன்கு கவனிக்கப்பட்டு வருகிறார்களா? அவர்களில்‌ எத்தனை பேர்‌ தங்கி உள்ளனர்‌?"
என்று மன்னர்‌ கேட்டார்‌.

அவரது குரலில்‌ இருந்த கரகரப்பு, கடந்த பத்து நாட்களாக நேரம்‌ தவறி விழித்து இருந்ததால்‌ அவரது உடல்‌ தலம்‌ பாதிக்கப்பட்டிருப்பதைத்‌ தெரிவித்தது.

"மகாராஜா! இன்று காலை, பெரும்பாலான பாளையக்காரர்களும்‌, புலவர்களும்‌ புறப்பட்டுச்‌ சென்றுவிட்டனர்‌. அவர்கள்‌ அனைவரும்‌ அரண்மனை மரியாதைகளுடன்‌ வழியனுப்பி வைக்கப்பட்டனர்‌. இரு கவிராயர்களும்‌ மதுரை சமஸ்தான நர்த்தகியும்‌ மட்டும்‌ தங்கி இருக்கின்றனர்‌. அவர்கள்‌ நாளைசக் காலையில்‌ புறப்படுவதாகச்‌
சொன்னார்கள்‌."

"நாட்டு நடப்பு பற்றிய செய்தி ஏதும்‌ உள்ளதா?"

"யாழ்ப்பணத்தில்‌ உள்ள டச்சுநாட்டு ஆளுதர்‌ இன்னும்‌ பத்துநாட்களில்‌ பாம்பன் முத்துச்‌ சலாபம்‌ பற்றி மகாராஜாவுடண்‌ பேசுவதற்கு வர இருக்கிறாராம்‌. தமது மறு மொழிக்காக அவரது தூதுவர் நமது அலுவலகத்தில்‌ காத்து இருக்கிறார்‌.

"நமது இணக்கத்தைத் தெரிவித்துப் பதில்‌ அனுப்பி வையுங்கள்‌. பாம்பன்‌ கோட்டையில்‌ டச்சு நாட்டு ஆளுநரைச்‌ சந்திக்கலாம்‌. அத்துடன்‌ முத்துச்‌ சலாபத்தின்‌ வழக்கம்‌ போல முதல்‌ நாள் முத்துக்கள்‌ நமக்கு உரியன என்பதையும்‌ நினைவுபடுத்தி எழுதுங்கள்‌.”

"இன்னொரு முக்கியமான செய்தி" என்று மன்னரிடம் சொல்லிவிட்டு அங்கு இருந்த அரண்மனை பணியாளர்களை பார்த்தார்‌ பிரதானி. குறிப்பையறிந்த அவர்களும்‌ அங்கிருந்து அகன்றனர்‌. மன்னரும் பிரதானியும் தனித்து இருந்தார்‌கள். பிரதானி தொடர்த்து சொன்னார்‌.

"நேற்று பிற்பகலில்‌ அரண்‌மனையிலிருந்து புறப்பட்ட தசரா விழாவில்
இதுவரை இராமதாதபுரம்‌ கண்டிராத பெருங்கூட்டம்‌ திரண்டு இருந்தது. உள்ளூர்‌ கோயிலில்‌ இருந்து எடுத்து வரப்பெற்ற உற்சவ மூர்த்திகள்‌ ஒன்றன்பின்‌ ஒன்றாக வந்து நமது ராஜராஜேஸ்வரி அம்மனது சந்திதானத்தில்‌ வரிசையாக
நிறுத்தப்பட்டன.

மகாராஜா அவர்கள்‌ ராஜராஜேஸ்வரி அம்மனைத் தரிசித்துவிட்டு, அம்மனது கொற்ற வில்லைப்‌ பெற்று அம்மனது சார்பாக வன்னிமரமாக தின்ற மகிஷாசுரணைக்‌
குறிபார்த்த நேரத்தில்‌ கடல்‌ போன்ற அந்தக்‌ கூட்டத்தில்‌ கட்டுப்பாடும்‌, அமைதியும்‌ நிலவின.

முதல்‌ அம்பு குறி தவறாமல்‌வன்னி மரத்தில்‌ பாய்ந்து குத்தி நின்றது. மகாராஜா அவர்கள்‌ அடுத்த அம்பை எடுத்து நாணேற்றும்‌ பொழுது மைதானத்தின்‌
வடகிழக்கு மூலையில்‌ சிறு சலசலப்பு இருப்பது தெரிந்தது. நமது வீரர்கள்‌ கூட்டத்தினரை விலக்கி அங்கு செல்வதற்குள்‌, அங்கே குடிபோதையில்‌ உளறியவாறு தள்ளாடிக் கொண்டிருந்த ஒருவனை கூட்டத்தினர்‌ நையப்புடைத்துவிட்டனர்.

சுயநிலை பெற்ற அவன் தனது காயங்களைப்‌ பார்த்து பயந்து வடக்கே உள்ள கண்மாய்‌ உள்வாய்க்குள்‌ ஓடிவிட்டான்‌. விஷயம்‌ தெரிந்த நமது வீரர்கள்‌
அவனைப்‌ பின்‌ தொடர்ந்தார்கள்.

அவன்‌ தப்பி ஒடும்‌ பொழுது அவன்‌ தவறவிட்ட சிறிய துணி முடிச்சு ஒன்றை மட்டும்‌ எடுத்து வந்து என்னிடம்‌ ஒப்படைத்தனர்‌. மாலையில்‌ வன்னி மைதானத்திலிருந்து
அரண்மனை வந்த பிறகு பிரித்துப்‌ பார்த்தேன்‌. அதில்‌ நூற்று ஐம்பது பொற்காசுகளும்‌ ஒரு சிறிய கட்டாரியும்‌ இருந்தன.
மகாராஜா அவர்கள்‌ அந்தப்புரத்துக்குள்‌ சென்றுவிட்டதால்‌ நேற்று தெரிவிக்க இயலவில்லை. இதோ அந்தத் துணி முடிச்சு" எண்று சொல்லிய பிரதானி அதனை பிரித்து மன்னர் முன்பு வைத்தார்‌.

"என்ன! கட்டாரியா?"' என்று சற்று வியப்புடன்‌ சொன்ன மன்னர்‌ அதனை எடுத்து நன்கு உற்றுக் கவனித்தார்‌.

"திருவிழாவிற்கு வந்தவன்‌ கட்டாரியுடன்‌ வந்து இருக்கிறான்‌. இந்தப் பொற்காசுகளும்‌ தமது நாட்டு அச்சு சாலையில்‌ தயாரிக்கப்பட்டவை அல்ல. அயல்‌ நாட்டுக்‌ காசுகள்‌. இந்த முடிச்சுத்‌ துணியும்‌ நமது நாட்டு நெசவு அல்ல" என்று மன்னர்‌ கருத்துத் தெரிவித்தார்‌.

பிரதானியின்‌ சிந்தனையிலும்‌ மன்னரது கணிப்பு எதிரொலித்தது. திருவிழாவிற்கு வந்தவன்‌ கட்டாரியுடன்‌ ஏன் வரவேண்டும்‌? கொலை நோக்கம்‌ எதுவும்‌ இருந்து இருக்குமா? அப்படியானால்‌ அவன்‌ குடி போதையில்‌ ஏன்‌ இருந்தான்‌? அயல்‌ நாட்டு நாணயங்களை வைத்திருந்த அவன்‌ அயல்நாட்டுக்காரனா அல்லது இந்த நாட்டுக்‌ குடிமகனா? இத்த வினாக்களை தமக்குள்‌ எழுப்பிக்‌ கொண்ட பிரதானி உரிய விளக்கம்‌ பெற இயலாமல்‌ தவித்தார்‌.

அப்பொழுது, "மூன்று. மாதங்களுக்கு முன்னர்‌ மதுரையில்‌ இருந்து திரும்பிய பொழுது, ஒரு கட்டாரியைக்‌ கொடுத்து தமது கருவூலத்தில்‌ வைத்திருக்குமாறு சொன்னேன்‌ அல்லவா? அதனைக் கொண்டு வாருங்கள்‌" என்று ஆணையிட்ட மன்னர்‌ பின்னர்‌ மெளனமாக இருந்தார்‌. பிரதானி, கார்வாரிடம்‌ தகவல்‌ சொல்லி அனுப்பினார்‌.
சிறுது தரத்தில்‌ கார்வார்‌ துணிச்சுருள்‌ ஒன்றை பிரதானியிடம்கொண்டு வந்து கொடுத்தார்‌. அதனைப் பிரித்து, அதனுள்‌ இருந்த கட்டாரியை எடுத்த பிரதானி அதை மன்னரிடம்‌ கொடுத்தார்‌.

மன்னர் இரு கட்டாரிகளையும் உற்று நோக்கினார். பின்னர், இரண்டு கட்டாரிகளையும்‌ பிரதானியிடம்‌ கொடுத்து, "இவைகளைச் சரி பாருங்கள்‌" என்றார்‌.

“இரண்டும்‌ ஒரே மாதிரியாகத்தான்‌ உள்ளன. இரண்டும்‌ ஒரே இடத்தில்‌ தயாரிக்கப்பட்டவை என்பது நன்றாகவே தெரிகிறது “ என்றார் பிரதானி.

"சரியாகச்‌ சொன்னீர்கள்‌. இவைகளைப்‌ பத்திரப்‌ படுத்தி வையுங்கள்‌. இது பற்றிப் பின்னர்‌ பேசலாம்‌."

"உத்திரவு. எதற்கும்‌ உளவுப்‌ பிரிவை உஷார்ப் படுத்தி வைக்கிறேண்‌. கோட்டைக்‌ காவலைக் கடுமையாக்கும் படி பார்த்துக்கொள்கிறேன்‌."

மன்னரது மனநிலையைப்‌ புரிந்து பதில்‌ சொன்ன பிரதானி விடைபெற்றுச்‌ சென்றார்‌.

ஆனால்‌ சேதுபதி மன்னர்‌
தொடர்த்து சிந்தனையில்‌ அங்கேயே ஆழ்த்து அமர்த்து இருந்தார்‌.
 

Author: SudhaSri
Article Title: அத்தியாயம் -10
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom