- Joined
- Jun 17, 2024
- Messages
- 27
தோற்ற மயக்கங்கள் 4
“மிஸ்டர் ஸ்ரீநிவாசன், நான் யாருன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். நான் வந்த விஷயமும் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்”
“...”
“நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். உங்க பொண்ணையும் என் பையனையும் சேர்த்து அந்தப் பத்திரிகைல வந்த செய்தியைப் பார்த்திருப்பீங்க. நம்ம குழந்தைங்களோட நியாயமான ஆசையை நிறைவேத்தறதை விட நமக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கு, சொல்லுங்க, அதான் தை மாசம் முதல் முஹுர்த்தத்துலயே எம் மகன் அன்புநேசனுக்கு உங்க மக அபர்ணாவைப் பொண்ணுகேட்டு வந்திட்டோம். துளசி, சொல்லும்மா”
மத்திய அமைச்சர் புருஷோத்தமன், திடீரெனக் குடும்பத்தோடு தங்கள் வீட்டுக்கு வந்ததே அதிர்ச்சி எனில், அவர் கூறிய விஷயமும் சொன்ன விதமும் கேட்டு அபர்ணா வீட்டினருக்குத் தூக்கி வாரிப் போட்டது.
‘இதென்ன, பெரிய மனுஷன்னு பாத்தா, தன் பையன் ஒரு பொண்ணு பின்னாடியே நாடு விட்டு நாடு போய் ஃபாலோ பண்ணினதை விட்டுட்டு, அபர்ணாவும் அவன் மேல ஆசைப்படற மாதிரியே பேசறான்’
கணவனை விட ஒருபடி மேலே சென்ற துளசி “எங்க என் மருமக, ஞாயித்துக்கிழமை, வீட்லதானே இருக்கா?”
பெண் பார்த்து, பேச்சு வார்த்தை முடிவாகி, பூ வைக்க வந்தவர்களைப் போல் நடந்துகொண்ட மாமனார், மாமியாரை சலனமற்றுப் பார்த்தான் ஐயாரப்பன்.
புருஷோத்தமனுக்கு இருந்த ஆஸ்தி, அந்தஸ்து, செல்வாக்கில் பாதி கூட இல்லாத குடும்பத்தைச் சேர்ந்த ஐயாரப்பனின் மிகப் பெரிய தகுதி அவன் புருஷோத்தமனின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதும், அவர் சார்ந்திருக்கும் அதே கட்சியின் மற்றொரு அரசியல் பெரும்புள்ளியின் உறவினன் என்பதும்தான்.
மாநில அரசியலில் இருப்பதற்கும், தேசிய அரசியலில் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. புருஷோத்தமனின் அரசியல் வாழ்வு அவரது கௌரவம் சம்பந்தப்பட்டது. அவர் பதவியினால் வரும் அதிகாரத்தை விரும்பினாரே தவிர, அதனால் லாபம் பார்க்க நினைக்கவில்லை. அவரது பொருளாதார மேதமைக்கும் , தொழில் ஆலோசனைகளுக்கும் கட்சிகளைத் தாண்டி மதிப்பும் மரியாதையும் இருந்தது.
அதற்காக அவர் மாண்புமிகு. பரிசுத்தம் என்றும் அர்த்தமில்லை. அவர் அமைச்சராக இருந்த துறைகளில் ஏதோ ஒரு மைல் கல்லைத் தொட்டிருக்கிறார். சமீபத்திய பொருளாதாரக் கொள்கையில் கூட, புருஷோத்தமனின் பங்கு மகத்தானது என ஏகோபித்த பாராட்டைப் பெற்றிருந்தார்.
பரம்பரை பணக்காரரும் அரசியல்வாதியுமான மாமனாரின் மாப்பிள்ளையாக இருப்பதே தனக்குத் தனி மதிப்பையும் அங்கீகாரத்தையும் தருவதை, அவரது மகள் பொன்னியைக் கல்யாணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே உணர்ந்த ஐயாரப்பன், அதைத் தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் சாதகமாக்கும் வழிகளில் இறங்கினான்.
புருஷோத்தமன் தனக்குத் தெரியாமல் தன் பெயரை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கிய மருமகனின் இடையீடுகளை ஒரு அளவில் நிறுத்த வேண்டி, மாப்பிள்ளைக்கான சகல மரியாதைகளையும் அளித்து, வேண்டிய/ வேண்டாத அனைத்து வித வசதிகளையும் செய்து கொடுத்துக் கிட்டத்தட்ட அவனைத் தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தார்.
திருமணமான மூன்று வருடங்களிலேயே, மாருதியில் இருந்து மெர்ஸிடிஸ் காருக்கு மாறி இருந்த ஐயாரப்பன், தன் இரண்டாவது தங்கையை அன்பு நேசனுக்கே திருமணம் செய்து கொடுத்து, மனைவியின் குடும்பத்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வர நினைத்திருந்தவனின் ஆசையில், மச்சான்காரன் ஐந்து லாரி மண்ணை அள்ளிப் போட்டிருக்க, ஐயாரப்பனுக்கு அங்கே முகம் மாறாது அமர்ந்திருப்பதே கடினமாக இருந்தது.
இன்று காலையில் இதைச் சொன்னபோது, அவன் அம்மா வேறு ‘என்ன செய்வியோ, ஏது செய்வியோ தெரியாது, அந்த அன்பு பயதான் நம்ம வீட்டுக் கடைசி மாப்பிள்ளை’ என்றிருந்தார்.
‘நானே இந்தக் கல்யாணத்தை எப்படிடா நிறுத்துறதுன்னு இருந்தா, இவங்க என்னமோ காவியக்காதல் மாதிரி ஃபிலிம் காட்டுறாங்க’ என ஏகக் கடுப்பில் இருந்தான்.
வேறு வழியின்றி அபர்ணாவை வெளியில் அழைக்க, “பொன்னி, வந்து இந்தப் பூவை வெச்சு விடு” என்ற துளசி, பட்டுப்புடவையின் மேல் ஒரு நகைப்பெட்டியை வைத்து அபர்ணாவிடம் நீட்ட, மிரண்டு அநிச்சையாக இரண்டடி பின்னே நகர்ந்தவளின் கையில் தட்டைக் கொடுத்த பிறகே நகர்ந்தார் துளசி.
பாட்டி ராஜலக்ஷ்மி “இருக்கட்டும் மா, திடீர்னு பெரிய மனுஷாள்ளாம் வந்ததும் அவ கொஞ்சம் பயந்துட்டா” என்றார் நயமாய்.
சீதா பதட்டத்தில் இருக்க, அவளை அபர்ணாவோடு உள்ளே அனுப்பிய பாட்டியும் ஸ்ரீநிவாஸனும்
“கொழந்தை ரொம்ப ஆசைப்பட்டு சேர்ந்த படிப்பு. ஆச்சு, இன்னும் ஒரு வருஷம்தான். அது வரைக்கும்…” என நயமும் விநயமுமாகப் பேசி அவகாசம் கேட்டனர்.
புருஷோத்தமன் ஸ்ரீநிவாஸன், சீதா இருவரின் வேலை குறித்தும், இரண்டாவது மகளின் படிப்பு குறித்தும் தெரிந்து வைத்திருந்தார்.
மகள் ஓரளவு பிரபலமான பாடகியாக இருப்பினும், நகரத்தின் எங்கோ ஒரு மூலையில் இருப்பதே தெரியாமல் இருக்கும் ஸ்ரீநிவாசனின் குடும்பத்திற்கு ஏனோ மிலிட்டரி ரேடாரின் எல்லைக்குள் நுழைந்த உணர்வு.,,,,
ஓரளவு பிரபலமான, வளர்ந்து வரும் கர்நாடக சங்கீதப் பாடகியாக இருப்பதில், வெளியில் சென்றால் ரசிகர்களால் அவ்வப்போது அடையாளம் காணப்பட்டாலுமே, பட்டு, நகைகளைத் தவிர்த்து, இயல்பான உடைகள், பெரிய குளிர் கண்ணாடி என அவசியமான இடங்களுக்குத் தன் தோழிகளுடன், குடும்பத்துடன், தங்கையுடன் என வெளியே செல்லும் அபர்ணா, இனி தன்னிச்சையாக வெளியே செல்லும் சுதந்திரம் தனக்கில்லை என்பதை அன்று மாலையே தெரிந்துகொண்டாள்.
செய்தித்தாள்களின் மாலைப் பதிப்பில் ‘அமைச்சர் மகனின் அக்ரஹாரக் காதல்’ என அபர்ணா தலைப்புச் செய்தியானாள்.
“என்னடீ யோசனை, இங்க கவனமில்லாம?”
கடிகாரத்தைப் பார்க்க, நேசன் புறப்பட சில நிமிடங்களே இருந்தன.
கணவனின் கேள்வியைத் தவிர்த்தவள் “டயமாச்சு, எல்லாம் சரியா இருக்குதானே, பெட்டிய மூடிடவா, அம்மு எங்க போனா?” என்று பார்க்க, அறைக்கதவு தாழிடப்பட்டிருந்தது
“அம்முவ நான்தான் அனுப்பினேன்”
“...”
என்னதான் பெரிய வீடு, ஐந்தாறு வயதில் இருந்தே பிள்ளைகளைக்குத் தனியறை, அமுதா வயதுக்கு வந்ததும் தனித்தனி அறை என்றிருந்தாலுமே, வளர்ந்த பெண் வீட்டில் இருக்கையில் இந்தத் தனிமை சங்கடத்தைக் கொடுத்தது.
‘அமுதா என்ன நினைப்பாள், வயசுப் பொண்ணுக்கு அம்மா, அப்பா மேல இருக்கற மரியாதை போறதோட, வீண் கற்பனைக்கும் இடம் கொடுக்கறோம்னு இவருக்குப் புரியவே இல்லையா?’
சற்றும் எதிர்பாராத சமயம் மனைவியின் இதழில் அழுந்தப் பதிந்த அன்பு நேசன்
“ரொம்ப யோசிக்காதடீ, அம்முக்கு பீட்ஸா ஆர்டர் பண்ணி இருக்கேன், காவேரியோட கீழ வெயிட் பண்றா” என்று கண்ணைச் சிமிட்டியதில் அபர்ணா சிறிது தடுமாறவும் வாய்விட்டுச் சிரித்தான்.
கணவனை வழியனுப்பி, செக்யூரிட்டிக்கு பத்திரம் சொல்லி ‘இங்கயே படுத்துக்கவாம்மா என்ற காவேரியை மறுத்து அனுப்பி, முன், பின் கதவுகளைப் பூட்டி,
மகளுக்குத் தைரியமும் குட்நைட்டும் சொல்லி விட்டுத் தங்கள் அறைக்கு வந்தாள்.
எப்பொழுதும் இன்னொரு டிரைவரான குமரனை இங்கே விட்டு கணேசனை உடன் அழைத்துச் செல்பவன், இம்முறை மகளின் பாதுகாப்பு கருதி கணேசனை இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டான்.
காரில் ஏறும்முன் மகளுக்குக் கேட்காதபடி “கணேசா, அம்மு பயந்து போயிருக்கா.
பின்னால வந்தான், பக்கத்துல வந்து பேசினான், அப்பா எம்எல்ஏ, போலீஸ் ஆஃபீஸர்ன்ற கதையெல்லாம் வேணாம். எவனா இருந்தாலும் தூக்கு, பார்த்துக்கலாம். ஏதும் பிரச்சனைன்னா உடனே சொல்லு, மூணு மணிநேரத்துல இங்க இருப்பேன்” என எச்சரித்ததில் முன்பே கிளறப்பட்டிருந்த அபர்ணாவின் நினைவுகள் அடங்காது ஆர்ப்பரித்தது.
அபர்ணாவின் தந்தை அன்புநேசனின் பெற்றோரிடம் தான் கேட்ட அவகாசத்தை சரியாகப் பயன்படுத்த எண்ணி, ரகசியமாகக் காய் நகர்த்தினார், அல்லது அப்படி நம்பினார்.
ஆனால், அவரது திட்டம் எல்லாப்பக்கமும் பிசுபிசுக்கவும்தான், தாங்கள் எததனை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறோம் என்றே அவர்களுக்குப் புரிந்தது.
அவளது வீடு இருந்த தெருவிலும், கல்லூரிக்குச் செல்லும் வழியிலும், கல்லூரியிலும், வேறெங்கு வெளியில் சென்றாலும் பாதுகாவலா, கண்காணிப்பா என்று சந்தேகம் வருமளவு ஆள்கள் நிழலாகத் தொடர்ந்தனர்.
சிவராத்திரியன்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் பாட ஐந்து மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தமாகி இருந்தது. ஹைதராபாத் கிளம்புவதற்கு முதல்நாள் மாலை ப்ரோகிராம் கேன்ஸல் என்று தகவல் வந்தது. அங்கே என்ன பிரச்சினையோ என்று விட்டு விட்டனர்.
ஆனால், ஹைதராபாதில் இருக்கும் பாட்டி ராஜலக்ஷ்மியின் தங்கை “ராஜி,
, அபர்ணா ஏன் கச்சேரிக்கு வரலை, நான் ஸ்ரீசைலத்துக்கு போயிருந்தேன். யாரோ உள்ளூர் பையனை அவசர அவசரமா புடிச்சு பாட வெச்சா. உங்க எல்லாரையும் எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டேன்டீ” என்றது காரணமின்றி நெருடியது.
அடுத்து ராமநவமியை முன்னிட்டு சென்னையிலேயே நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவிலிலும் அயோத்யா மண்டபத்திலும் மூன்று நாள் இடைவெளியில் இரண்டு கச்சேரிகள் இருந்தன.
இரண்டுமே மியூஸிக் அகாடமி, வாணி மஹால் போல பெரிய அரங்கமோ, நோக்கமுள்ள பார்வையாளர்களோ அல்லாது, ரசனையும் ஆர்வமும் பக்தியுமாக கலவையான, சாதாரண, பலதரப்பட்ட மக்கள் கூடுமிடம். இத்தனை இருக்கைகள், இத்தனை பார்வையாளர்கள் என கணக்கிட முடியாது. மக்கள் வந்து சென்றவண்ணம் இருப்பார்கள்.
கோவிலுக்கென வந்தவர்கள், இருந்து பாட்டைக் கேட்கலாம், இரண்டு, மூன்று பாடல்களுக்கு மட்டும் காத்திருக்கலாம். கட்டணக் கச்சேரி இல்லை என்பதால், சபாக்களுக்கு சென்று பணம் கொடுத்து இசையை ரசிக்கும் வசதி இல்லாதவர்கள் நல்ல சங்கீதத்தைக் கேட்க அருமையான வாய்ப்பு கோவில் கச்சேரிகள். குறிப்பாக முதியவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகமாக இருக்கும்.
பாடகர்களுக்கு அதிகப் பணம் இல்லாவிடினும் மனமார்ந்த பாராட்டு கிடைக்கும். அன்று பெருமாளுக்கும் ராமதூதனான ஆஞ்சனேயருக்கும் விசேஷமான
சனிக்கிழமை வேறு.
சீதாவின் தாய் வீடு நங்கநல்லூரிலேயே இருப்பதால் காலையிலேயே வந்து விட்டனர். பூஜை, இரண்டு வகை அவல், வடை, பானகம், நீர்மோர் என முடிந்து, அபர்ணா அன்று பாடுவதாக இருந்த சாகித்யங்களை ஒருமுறை சாதகம் செய்தாள்.
ஏழே காலுக்குக் கோவிலுக்குச் சென்று, சன்னதிக்கெதிரே ஒரு கும்பிடு போட்டு, நேரே மேடையேறினாள்.
‘கணநாயகாய கணதைவதாய’ என டெம்போவோடு கச்சேரியைத் தொடங்கி, அடுத்து சற்றே நீண்ட ஆலாபனைக்குப் பின் சாமஜ வர கமனாவைத் தொடர்ந்து, பலத்த கரவொலிகளுக்கு நடுவே மூன்றாவதாக ‘ராமா கோதண்ட ராமா’ என பைரவியில் வேகம் கூட்டியவள், கூட்டத்தின் பின்னே சிறு சலசலப்பு எழ, பக்க வாத்தியக்காரர்கள் வரை தன்னைக் குறுகுறுப்பாகப் பார்ப்பது போலிருக்க, பாடியபடியே பார்வையைச் சுழற்ற, மூன்றாவது தூணோரமாய் நின்றிருந்தான் அன்புநேசன்.
ஆலாபனை, கல்பனாஸ்வரங்கள் என அதிக சங்கதிகள் இல்லாத பாடல் என்பதோடு, மேடை புதிதில்லை என்பதும் சேர தடையற்றுப் பாடினாலும், உள்ளுக்குள் பதறியது.
முதல் இரண்டு வரிசைகளில் அபர்ணாவின் குடும்பத்தினர் அமர்ந்திருக்க, தந்தை ஸ்ரீநிவாசன் தன் கலவரத்தை முகத்தில் காட்டாது, கண்களை மூடித் திறந்து, தொடர்ந்து பாடுமாறு மகளுக்குத் தைரியம் அளித்தார்.
அடுத்த ஒரு மணி நேரமும் சிறு வயதிலிருந்து செய்த சாதகத்தின் பலனாக பதட்டத்தை மறைத்துப் பழக்கத்தில் பாடினாள்.
கச்சேரி முடிந்தபின், கோவில் நிர்வாகிகள் மாலையும், சால்வையும் அளித்து, ஆஞ்சனேயர் சன்னதிக்கு அழைத்துச் சென்று தீபாரதனை காட்டிய பொழுதில், அன்புநேசன் அபர்ணாவின் நேர் பின்னே வந்து நின்றிருந்தான்.
அபர்ணாவின் வீட்டினர் செய்வதறியாது திகைக்க, இசைக்குழுவினரும் கோவில் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஆர்வமும் ஐயமுமாகப் பார்த்தனர்.
ஆரத்தியும், துளசி தீர்த்தமும் வர, அவளுடனே கை நீட்டிப் பெற்றுக் கொண்டான். அவனது ஆறடி உயரத்திற்கு அபர்ணாவின் முகத்தருகே குனிந்து சடாரியைத் தலையில் ஏற்றுக்கொண்டவன் “அனுமார் கிட்ட சீக்கிரமா நம்மையும் சேர்த்து வைக்கச் சொல்லு” என்று அவள் காதருகில் முணுமுணுக்க, பெண்ணுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அன்புநேசன் அவளது குடும்பத்துடன், குறிப்பாக அபர்ணாவுடன் இணைந்து நடந்து அவர்கள் கார் வரை வர, பொதுவில் வைத்து எதுவும் பேச முடியாத நிலையில் அவளது வீட்டினர் அமைதி காக்க, அதுவே பேசு பொருளானது.
தினசரியில் வந்த படங்கள், செய்திகள், யூகங்கள் என்பதைத் தாண்டி நேரிலேயே பார்த்த பொதுமக்களுக்கு, அமைச்சரின் மகனுக்கு அபர்ணாவின் மேலிருந்த அக்கறையும் காதலும்(!) சுவாரஸ்யத்தைத் தந்தது.
அபர்ணாவின் காரைத் தொடர்ந்து பெஸன்ட்நகர் வீடுவரை வந்து, அவர்கள் இறங்கி உள்ளே செல்லும் முன்
“ஸ்ரீசைலத்துல கச்சேரி கேன்ஸல் ஆனது உங்களுக்குப் புரியலை போல. இனிமே இந்த மாதிரி கச்சேரியெல்லாம் ஒத்துக்க வேணாம். அயோத்யா மண்டபம் கச்சேரியை ஆல்ரெடி கேன்ஸல் செஞ்சாச்சு”
இரவு பத்தரை மணிக்குப் பாட்டி, தந்தை, தங்கை என எல்லோரும் அதிர்ந்து நிற்க, சுதாரித்த சீதா “ஏன், பாடினா என்ன, இப்படி ஒத்துண்ட கச்சேரியை எல்லாம் கேன்ஸல் பண்…”
இடைமறித்தவன் “அவ அப்படி பப்ளிக்ல பாடறதுல எனக்கு விருப்பம் இல்ல. புரியுதா, அப்பூ, பை” என்று கிளம்ப, அதிர்ச்சியில் வேரோடி நின்றவளை உலுக்கினாள் ஹேமா.
வழக்கமாக கச்சேரி முடிந்து வந்ததும் திருஷ்டி கழிக்கும் பாட்டி, பேத்தியின் மேல் படிந்துள்ள அதிகார திருஷ்டியையும் அவளது நற்பெயரின் மீது விழுந்த களங்கத்தையும் கழிக்கும் வழியறியாது உறைந்தார்.
நள்ளிரவைத் தாண்டியும் வீட்டினரின் பேச்சில் ஆதங்கமும் ஆற்றாமையும் பொங்கி வழிந்தாலும், அபர்ணா எதுவும் பேசவில்லை என்பதைவிட அவளால் பேச முடியவில்லை என்பதுதான் நிஜம்.
தன் அனுமதியின்றி தன்னைச் சுற்றி நடப்பது எதையும் நம்ப முடியாத அழுத்தத்தில் இருந்தவளுக்கு இன்னுமே, அத்தனை பேருக்கு முன், கோவிலில் வைத்து, நெருக்கமும் உரிமையும் இயல்புமாய் காதருகில் குனிந்து பேசிய அன்புநேசனின் செயலை ஜீரணிக்க முடியாது தவித்தாள்.
உமட்டிக்கொண்டு வர, காலையில் இருந்து சாப்பிட்டவை அனைத்தும் வெளியேறியது.
எதற்கென்று தெரியாமல், இரவு ஒரு மணிக்குத் தேய்த்துத் தேய்த்துக் குளித்தாள்.
இன்று போல் காமிராக்களுடன் கூடிய செல்ஃபோன்கள் இல்லை என்பதால், உடனடியாக இன்றி, மறுநாள் காலை
‘கச்சேரி, காதல்… கல்யாணம்?’ என்ற தலைப்புடன் அபர்ணாவும் அன்பு நேசனும் ஜோடியாக நின்று கடவுளை வணங்குவது போன்ற படமும், அவன் சிரித்த முகத்துடன் அவளருகே குனிந்து
சடாரியை ஏற்றுக்கொள்ளும் படமும் வெளியான விதத்தில், அவளுக்கே அவள் மீது சந்தேகம் வந்துவிடும் போல் இருந்தது.
அபர்ணாவின் உடலும் மனமும் தேற தேவைப்பட்ட நாலைந்து நாட்களில் அவள் ஏன் கல்லூரிக்குச் செல்லவில்லை, அவள் உடம்புக்கு ஏதுமா என ஸ்ரீநிவாசனிடமே தொலைபேசியில் கேட்டான் அன்புநேசன்.
சொந்த மாமாவின் மகன்தான் என்றாலும் அமெரிக்காவில் இருக்கும் முகுந்தன் இதுவரை மொத்தமாக நான்கு முறை அவருக்கு அழைத்திருந்தாலே அதிகம். அதிவுமே, ஃபோனை எடுப்பவரிடம் ஒரு ஹாய், பிறகு அத்தை சீதாவுடன் ஓரிரு நிமிடங்கள் என பேசிவிட்டு வைத்து விடுவான்.
கண்ணாடி ரோஜாவைக் கொடுத்தவன் கண்காணாத தேசத்தில் இருக்க, எந்த நேரத்தில் என்ன செய்வானோ எனற பதட்டத்திலேயே அபர்ணாவை வைத்திருந்தான் அன்புநேசன்.
செமஸ்டர் தேர்வுகள் நெருங்குவதால் படிப்பில் கவனமும் தனது பாட்டு வகுப்புக்குச் செல்வதுமாக இருந்தாள் அபர்ணா. செமஸ்டர் தேர்வுகள் தொடங்கின.
இந்த வருடமும் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளுக்கு வந்த அழைப்புகளை ஏற்கத் தயக்கமாக இருந்தது. தன்னை நம்பி, தன் பாட்டைக் கேட்கவென கடல் கடந்து ஆர்வத்துடன் காத்திருப்பவர்களை, தனக்குத் துளியும் சம்பந்தமில்லாத ஒருவனின் விருப்பத்திற்கும் கௌரவத்திற்கும் பயந்து தவிர்ப்பதும் அபர்ணாவிற்குப் பிடிக்கவில்லை.
தேவையும் அர்த்தமுமில்லாத பயம்தான். அபர்ணாவிற்கு நடுநடுவே, இங்கே நடப்பது முகுந்தனுக்குத் தெரியுமா, அவனிடம் சொல்லி இருப்பார்களா, இதைப் பற்றி அவன் என்ன நினைக்கிறான் என்ற யோசனை ஒருபுறம் ஓடியது.
அவன் வந்தால் இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடும், இதற்கான தீர்வு முகுந்தனிடம்தான் இருக்கிறதென அபர்ணா நம்பினாள். தீர்வு யாரிடமோ, ஆனால் தீர்ப்பு முகுந்தனின் அம்மாவிடம் இருந்தது.
அபர்ணாவை முகுந்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், அன்புநேசன் தானே விலகி விடுவான் என நினைத்த ஸ்ரீநிவாஸன் தம்பதி, எந்த முன்னேற்பாடுமின்றி, பங்கனப்பள்ளி மாம்பழம் மற்றும் கேசரி சகிதம் நங்கநல்லூருக்குச் சென்றனர்.
முகுந்தனின் அக்கா தன் இரண்டாவது பிரசவத்திற்கு வந்திருந்தாள். என்னதான் கேட்கப்போவது தன் அண்ணாவிடம்தான் என்றாலும், சூழ்நிலை காரணமாக நயந்து போவதுபோல் தோன்றவும், சீதாவே பேசத் தயங்கினாள்.
விஷயம் தெரிந்த சீதாவின் அம்மா தூண்டுதல் போட, ஸ்ரீநிவாஸன் மெதுவே “நம்ம முகுந்தனுக்கு அபர்ணாவைக் கொடுக்கணும்னு நாங்க பிரியப்படறோம். எங்களுக்கு மனப்பொருத்தம் போறும். உங்க திருப்திக்கு வேணும்னா ஜாதகம்….”
கேட்டது தங்கையின் கணவர் என்பதாலோ என்னவோ சீதாவின் அண்ணன் பேசாதிருக்க, அவர் மனைவி பட்டென பதில் சொன்னாள்.
“எங்களுக்கு மனப்பொருத்தம் , ஜாதகப் பொருத்தம் ரெண்டுமே வேண்டாம். ஆனா, கட்டாயமா மனசுக்கு திருப்தியும் நிம்மதியும் வேணும்”
“அகிலா” என்ற மாமியாரையும் கணவரையும் ஒரு முறை பார்த்தவள், தொடர்ந்தாள்.
“தப்பா நினைக்காதீங்கோ, அபர்ணா நல்ல பொண்ணுதான். அவ அழகும் பாட்டும் படிப்பும் தேடினாலும் கிடைக்காதுதான். ஆனா, ஊரே பார்க்க, அத்தனை கிட்டத்துல வந்து வெகு ஸ்வாதீனமா ஒருத்தன் பேசறான்னா, என்னால அதை இயல்பா எடுத்துக்க முடியலை”
அழுகையும் ஆத்திரமும் மேலிட “மன்னீ…” என்றாள் சீதா.
“தப்பா சொல்லல சீதா. அபர்ணாவை நான் சந்தேகப்படலை. ஆனா, இத்தனைக்கு அப்புறமும், அந்தப் புள்ளையாண்டான், அபர்ணாவோட கல்யாணத்தை
இன்னொருத்தனோட நடக்க விடுவாங்கற நம்பிக்கை எனக்கில்லை”
ஸ்ரீநிவாஸன் பட்டென எழுந்துவிட “என்னால உங்க நிலமையை புரிஞ்சுக்க முடியறது. ஆனா, ஆறு வருஷமா வேற தேசத்துல தனியா இருக்கற எம்புள்ளையோட கல்யாணம் எந்தத் தடங்கலும் இல்லாம அமைதியா நடக்கணும்னு நினைக்கறேன். என்னை மன்னிச்சுடுங்கோ“ என, சீதாவின் அண்ணனும் மௌனமாக மனைவியை ஆமோதித்தார்.
பட்டென்று உடைத்தாலும், மனதில் உள்ளதைப் பேசியவளின் ஆசையும் நியாயம்தானே?
முகுந்தனின் விருப்பமும் அபர்ணாவின் ஆசையும் பெரியோர்களின் பேச்சு வார்த்தையில் வெளிவராமலே போனது.
உண்மை அனைத்தும் தெரிந்த தாய்மாமனே ‘இருக்குமோ?’ என சந்தேகிக்க, அவசரத்தில் அயனான வரனை எங்கே போய்த் தேட? இப்போதைக்கு இன்னும் ஒரு வருடப் படிப்பு இருக்கிறது, அதன்பிறகு பார்க்கலாம்” எனப் பிரச்சினையை ஒத்திப் போட்டனர்.
அபர்ணாவிற்கு பாட்டு சொல்லித் தரும் மாமி, தன் மருமகளுக்கு பிரசவம் என கனடா சென்று விட, வகுப்புகளும் கச்சேரிகளும் இல்லாது, பாட்டி ராஜலக்ஷ்மியின் வற்புறுத்தலால் சாதகம் செய்தாளே தவிர, பழைய
உற்சாகம் சிறிதுமின்றி, கோடை விடுமுறையை நெட்டித் தள்ளினாள் அபர்ணா.
அதுவும் மாமி அகிலா பேசியதை அறிந்த பின் அபர்ணா தன் நம்பிக்கை நிராசையானதை உணர்ந்தாள். இதில் யாருமே எதிர்பாராதது, முகுந்தனின் வருகையை.
அபர்ணா நியூஜெர்ஸி வந்து சென்று விளையாட்டுப்போல் ஒரு வருடம் ஓடியிருக்க, தென்னிந்திய அஸோஸியேஷனில் யுகாதி, விஷு, தமிழ் வருடப் பிறப்பு என எல்லாவற்றிற்கும் பொதுவாய் ஒரு பார்ட்டி நடந்தது. பாடகி அபர்ணா ஸ்ரீநிவாஸன் முகுந்தனின் உறவுப்பெண் என்பதை அறிந்திருந்த சில நியூஜெர்ஸி வாழ் தமிழ் கூறும் நல்லுலக மக்கள், இந்த வருடமும் அவளது கச்சேரி உண்டா என முகுந்தனைக் கேட்டனர்.
சமீபமாக இந்தியா சென்று மணமுடித்து வந்த ரமேஷ் “அந்தப் பொண்ணுக்கும் சென்ட்ரல் மினிஸ்டர் பையனுக்கும் லவ்வாம்” என, தினசரிகளிலும் வந்திருந்த செய்தியை ஒலிபரப்பினான்.
ஓரிரு வாரப் பத்திரிக்கைகள் கூடப் பகிரப்பட்டன.
கேட்டதையும் படித்ததையும் நம்ப முடியாது திகைத்த முகுந்தனுக்கு, தான் “வில் வெய்ட் ஃபார் யூ” என்ற கணத்தில் சிவந்து, விகசித்துப் பளபளத்த அபர்ணாவின் முகம் நினைவாட, செய்தியைப் பொய்யென்று புறந்தள்ளினான்.
அபர்ணா வந்து சென்றதில் இருந்தே தனிமையை அதிகம் உணரத்தொடங்கி இருந்த முகுந்தன், இப்போது உள்ள நிலையில் அபர்ணாவின் மனதை அறிந்து கொள்ள விரும்பினான்.
அலைபேசி பரவலாக புழக்கத்தில் இருந்தாலுமே இன்னும் அபர்ணா வீட்டினரிடம் கிடையாது. அதுவரை இல்லாத வழக்கமாக, அத்தை மகளை லேண்ட்லைனில் அழைத்துப் பேசத் தயக்கமாக இருந்தது.
சட்டென நேரில் சென்று பார்க்க முடிவு செய்து மே மாத இறுதியில் சென்னை வந்து இறங்கினான் முகுந்தன்.
ஜெட்லாக் எல்லாம் முடிந்து, அக்கா குழந்தைகளைக் கொஞ்சி, அம்மா, பாட்டி கையால் உண்டு, உறங்கி, வாங்கி வந்த சாக்லேட்டுகள், முந்திரி, பாதாம் ஷேவிங் ரேஸர், மற்றும் டப்பர்வேர் டப்பாக்களை விநியோகித்த பின், முகுந்தன் அத்தை வீட்டை பற்றி பட்டும் படாமல் விசாரித்தான் .
பெண் பேசுபொருளாகும்போது மிகைப்படுத்துதல் இயல்பு என்ற இலக்கணத்தை மீறாது, முகுந்தனின் அம்மா அகிலாவும் அபர்ணா, அன்புநேசனின் ஸோ கால்ட் காதலுக்குக் கண், காது, மூக்கோடு பொட்டு, பூ , மை எல்லாம் சேர்த்தே வைத்து மகனிடம் நடந்ததை விவரித்தாள்.
என்றும் இல்லாதபடி, அத்தை மகளைப் பற்றி ஆவலுடன் மகன் கதை கேட்ட விதத்தில் அகிலாவிற்கு பயம் பிடித்துக்கொண்டது.
“நீயே சொல்லு முகுந்தா, இப்படி ஊரே பாக்கறதும் பேசறதுமா இருக்கற பொண்ணை உனக்குக் கொடுக்கறேன்னு வந்து நின்னா என்னால எப்படிடா ஏத்துக்க முடியும்?”
“அதை விடும்மா. அவா வந்து கேட்டாளா, அபர்ணா என்ன சொன்னா?”
மகனின் ஆர்வம் எரிச்சலைத் தர “அவ என்னத்தை சொல்லுவோ, இவ கதையைக் கேட்டு ஊரே கொல்லுனு கிடக்கு. அதுமட்டுமில்லாம பெரியமனுஷன், அரசியல்வாதி, அதுலயும் மினிஸ்டர் வேற, அவாளைப் பகைச்சுக்க முடியுமோ?”
“...”
“அப்படியே நம்மாத்துப் பொண்ணுன்னு நாம கல்யாணத்தை விடு, ஒரு நிச்சயத்துக்கு ஏற்பாடு பண்றோம்னே வை, அந்தப் பையன் சும்மா இருப்பான்னா நீ நினைக்கற, உங்களைத்தானே, நீங்க என்ன சொல்றேள்?” என கணவரையும் கூட்டு சேர்த்துக்கொண்டாள் அகிலா.
முகுந்தனின் பாட்டியால் எந்தப் பக்கமும் பேச முடியவில்லை.
எதிலும் சமாதானமடையாது மறுநாள் அத்தை வீட்டிற்குப் புறப்பட்டவனுடன் அவனது பெற்றோரும் கிளம்பினர்.
முகுந்தன் இந்தியா வந்த நேரத்தை அவதானித்த அன்புநேசன், இதுபோன்ற சூழலில் எல்லாப் பெற்றோர்களும் செய்ய நினைப்பது, ரெடிமேடாக கையில் இருக்கும் முறைப் பையனுக்குப் பெண்ணைக் கட்டிக் கொடுப்பதுதான் என்பதால்,
இதற்கு மேலும் காலம் தாழ்த்த விரும்பாது, தன் பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினான்.
அபர்ணாவின் பெஸன்ட்நகர் வீட்டிற்கு வந்த, முகுந்தனுக்கும் அவனது பெற்றோர்களுக்கும், அன்று ஜூன் நான்கு, அபர்ணாவின் பிறந்தநாள் என்பது நினைவில் இல்லையோ அல்லது தெரியாதோ, தெரியாது.
ஆனால் அவர்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம், கேக்கும் பொக்கேவுமாய் வந்த அன்புநேசன் “பர்த் டே கேர்ள் எங்க?”
அபர்ணாவின் விழிகளில் தன்னையும் முகுந்தனையும் ஒருசேரக் கண்டதில் தெரிந்த அலைப்புறுதல் சற்றே உறுத்த, வாயில் புறம் சென்ற அன்புநேசன் ஓரிரு ஃபோன் கால்கள் செய்தான்.
அவனது தந்தை புருஷோத்தமன் தொகுதிக்குச் சென்றிருக்க, சற்று நேரத்தில் ஐயாரப்பனுடன் அம்மா துளசியும், அக்கா பொன்னியும் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு முன்பே நாலைந்து நிரூபர்கள் வந்திருந்தனர்.
வீட்டிற்குள் வந்து, ஓரமாக நின்றிருந்தவளின் கையைப் பிடித்து “அப்பூ, வா கேக் கட் பண்ணலாம்” என அழைத்து / இழுத்து வந்து வெட்டச் செய்து, அவளுக்கு ஊட்டிய அன்புநேசனை, வீட்டினர் அனைவரும் திறந்தவாய் மூடாது, அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
ஸ்ரீநிவாஸனின் வீட்டுத் தொலைபேசி அழைக்க, மறுபக்கம் யாரோ, ஏதோ சொல்லச் சொல்லத் தலையசைத்தார் ஸ்ரீநிவாஸன்.
தன் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு தங்கச் செயினை எடுத்து, இமைக்கும் நேரத்தில் அபர்ணாவின் கழுத்தில் போட்டவன், வந்திருந்த பத்திரிகை நிரூபர்களிடம் அவளது பிறந்த நாளில் தங்கள் திருமணத்தை உறுதி செய்வதாகவும், அடுத்த மாதம் திருமணம் என்றும் அறிக்கை கொடுத்து, அவனே கிள்ளிய பிள்ளைக்குத் தொட்டிலை ஆட்டி, தனக்கும் அபர்ணாவுக்குமான காதல் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அமைச்சர் புருஷோத்தமனின் சார்பாகத் துளசியும், வேறு வழியின்றி அபர்ணாவின் தந்தையும் வழிமொழிய, அன்புநேசன் ஸ்தம்பித்து நின்றவளின் தோளில் கை வைத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தயவால், பட்டி தொட்டிகளில் எல்லாம் அவர்களது ஃபேரி டேல் காதல்(!) கதை (Fairy tale love story) பேசுபொருளானது.