- Joined
- Jun 17, 2024
- Messages
- 27
தோற்ற மயக்கங்கள் 5
“இதென்னடா சீனு, அநியாயமா இருக்கு. கேள்வி முறையே இல்லாம, அவன் இஷ்டத்துக்கு வந்தான், கையைப் புடிச்சான், கேக்கை ஊட்டினான், கழுத்துல சங்கிலிய போட்டான், நீயும் கல்யாணத்தை உறுதி செய்யறோம்னு ஆமாஞ்சாமி போடற?”
தாய் ராஜலக்ஷ்மியின் கேள்விக்குப் பதில் சொல்லாது வேதனையுடன் மகளைப் பார்த்தார் ஸ்ரீநிவாஸன். அபர்ணாவின் முகமும் கண்ணும் அழுதழுது வீங்கிச் சிவந்து கிடந்தது.
“எ…எனக்குப் பயமா இருக்கும்மா, நாம எங்கயாவது போயிடலாம்பா” எனத் திரும்பத் திரும்பச் சொன்னவளைக் கண்ட முகுந்தனுக்குக் கோபம் ஏறியது.
அதே சமயம், அவன் அம்மா அகிலா சொன்னதுபோல், இருக்கும் சூழலில் அவனால் ஆகக்கூடியது எதுவுமில்லை என்ற உண்மையும் தன் கையாலாகத்தனமும்
புரிய, குற்றவுணர்வு மிகுந்தது.
ஏதோ அவளே தவறு செய்ததுபோல் தன்னைப் பார்க்கவே தயங்குபவளைக் கண்டு ‘சும்மா இருந்தவளுக்கு ஆசை காட்டி, எது நடந்தாலும் உடன் நிற்கும் தைரியம் இல்லாது, சுயநலமாக இருக்கிறோனோ?’
அகிலா “நாம கமிஷனர், ஐஜி மாதிரி பெரிய போலீஸ் ஆஃபீஸர் கிட்ட கம்ப்ளையின்ட் குடுத்தா ஏதாவது பண்ண மாட்டாளா?”
ஸ்ரீநிவாஸன் “நான் முயற்சி பண்ணாமயா இருப்பேன். அதெல்லாம் மினிஸ்டர் புருஷோத்தமன் முதல் தரம் வந்தபோதே பேசியாச்சு. எங்க பேங்க் ரீஜனல் மேனஜரோட மச்சினன் சென்னையோட நாலு அஸிஸ்ட்டன்ட் கமிஷனர்ல ஒருத்தர்”
சீதா “அவர் என்ன சொன்னார்?”
“என்னத்த சொல்லுவார், கமிஷனர், ஐஜினு போனீங்கன்னா, அவங்களே மினிஸ்டர்கிட்ட சொல்லிடுவாங்க. ஓரளவு நல்ல பையனா இருக்கவும்தான் உங்க பொண்ணைத் தூக்கிட்டுப் போய் எதுவும் செய்யாம கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாரு. பேசாம, கல்யாணம் பண்ணிக் குடுத்துடுங்க. அன்னைக்கு மண்டபத்துல பாதுகாப்பு டியூட்டி எனக்கே வந்தாலும் வரலாம்னார்”
“அப்ப போலீஸ் நமக்கு உதவி செய்யாதா?”
“சினிமாலதான் ஒத்த இன்ஸ்பெக்டரோ, ஏசிபியோ ஜெயிப்பாங்க. நிஜத்துல அவங்களுக்கும் குடும்பம், குட்டி எல்லாம் இருக்கே” என்றார் மாமா.
அபார்ணா முகுந்தனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது இயலாமையும் அழுகையுமாக இருந்தாள்.
ஹேமா “இப்ப நாம ப்ரெஸ்ஸை கூப்பிட்டு இந்தக் கல்யாணம் கேன்ஸல், நடக்காது, எங்களை வற்புறுத்தறாங்கன்னு சொன்னா என்னாகும்?”
ஸ்ரீநிவாஸன் “நம்ம பேர் சந்தி சிரிக்கும். ஊர்ல நடக்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா, அந்த ஏசிபி விசாரிச்ச வரைல, இந்த நியூஸை எல்லாம் குடுத்ததே அன்பு நேசன்தானாம்”
மாமா “அடப்பாவி, அப்ப ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு, லவ் பண்றா, டேட் பண்றாங்கறா மாதிரி படிப்படியா ஒரு பிம்பத்தை, ஒரு பொய்யான இமேஜை உண்டு பண்ணி இருக்கான், ராஸ்கல்”
ஹேமா “அதென்ன மாமா மாதிரி… அப்புவை நீங்க நம்பலையா?”
மாமா “இல்லம்மா… சாதாரணமாதான் கேட்டேன்”
சீதா “கீப் கொயட் ஹேமா”
முகம் கசங்கி அடிபட்ட பார்வை பார்த்த அபர்ணா “என்னை ஏம்மா… அவனுக்கு நான் என்ன செஞ்சேன்? என்னால இதுல இருந்து வெளில வரவே முடியாதாம்மா?”
பாட்டி “அழாதடீ கண்ணே, சித்த அமைதியா இரு. நாராயணா, ஏன் இந்த சோதனை?”
அபர்ணா மீண்டும் “நான்… ஒய் மீ?”
ஏன் என்று முகுந்தனுக்குப் புரிந்தது. மத்திய அமைச்சரின் மகன், ஃபாரினில் போய் படித்த, பணக்கார, ஆளுமையான, கம்பீரமான தோற்றமுடைய அன்புநேசனின் தேவை, தேடல் எல்லாம் அழகான, படித்த, பண்பான, ஓரளவு பிரபலமான, கூட்டத்தைப் பார்த்து மிரளாத, பார்ப்போர் பாராட்டும், பொறாமைப்படும், ஒரு பெண்.
ஆளை அயர்த்தும் அபர்ணாவின் அழகு ஒருபுறம் எனில், திட்டமிட்டு பொது வாழ்க்கைக்குத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ளும் அன்புநேசனுக்கு அவளைப் போன்ற ஒரு பெண் மனைவியாக அமைவது வரம், பலம், பெருமை, கர்வம், கௌரவம். It’s a matter of pride. சரியாகச் சொன்னால் ஒற்றை அம்பில் புலியை வீழ்த்திய பெருமிதம்.
பாட்டும் படிப்பும் புகழும் கொண்ட அபர்ணாவுடன்தான் தன் திருமணம் என தானே முடிவு செய்த, தமிழ்நாட்டின் பிரபலமான மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலரான நேசப் புருஷோத்தமன், அதே தேவையும் தேடலும் அவளுக்கும் இருக்குமென்றோ, அவளது மனதில் இருக்கும் ‘கணவன்’ பிம்பத்தில் தான் பொருந்துகிறோமா என்றோ யோசிக்கவே இல்லை.
‘என்னால், எனக்காக, நானே’ என்ற கொள்கையுடன் அபர்ணாவுக்கும் சேர்த்து அவனே முடிவு செய்தான்.
“பாட்டி, இனிமே என்னை யாரும் நம்ப மாட்டாதானே, இதெல்லாம் உண்மைன்னுதானே எல்லாரும் நினைப்பா, பேசுவா?”
“ஷ்…. அபூ, போட்டுக் குழப்பிக்காதடீ” - ஹேமா.
“இல்லடீ ஹேமா, இனிமேல் நான் எப்டி காலேஜ் போவேன், பாட்டும் பாடக் கூடாது, அப்பா… “
எண்ணையிட்ட சகடையாய் உருண்ட வாழ்க்கை, எந்தப்பக்கமும் தப்பிக்க வழியின்றித் தத்தளித்தது.
‘இவ்வளவு கோழையா நான்? எதிர்த்துக் கேள்வியே கேட்காது நடப்பதை ஏற்றுக் கொள்கிறேனோ? எனக்கு முதுகெலும்பு என்ற ஒரு வஸ்து இருக்கிறதா இல்லையா?’ என்பது போன்ற சுய அலசல்களின் முடிவில் அபர்ணாவிற்கு மிஞ்சியதென்னவோ மனச்சோர்வுதான்.
இனி கல்லூரி நட்புகளை, ஆசிரியர்களை, பாட்டு மாமியை எதிர்கொள்வது எப்படி என்ற தயக்கம் எழுந்தது. அபர்ணாவுக்கு , அன்புநேசனின் மேல் உண்மையாகக்காதல் இருந்திருந்தால், இயல்பாகவே சமூகத்தையும் பெற்றோரையும் எதிர்க்கும் துணிவும் திடமும் இருந்திருக்கும். இப்போது பயம் மட்டுமே இருந்தது.
சீதா “இவளுக்கப்புறம் ஹேமா வேற இருக்காளே. இதனால அவளுக்கும்…”
சீதாவின் அண்ணா “எதையாவது உளறாத சீதா. இந்தக் காலத்துல போய் இப்படியெல்லாம் யோசிப்பியா? யாரோட வாழ்க்கையும் யாருக்காகவும் நிக்காது”
“அப்படி இல்லண்ணா, இவளை நெருங்கறது சுலபம், இவா வீட்டுல பணமும் பதவியும் இருந்தா யார்னாலும் சுலபமா சம்மதிச்சுடுவான்னு யாராவது ஹேமாவை ஒரு ஈஸி டார்கெட்டா நினைச்சுட்டா…”
ஹேமா “என்னம்மா நீ, நான் என்ன அத்தனை முட்டாளா?”
ஸ்ரீநிவாஸன் “ஹேமா, அப்ப அபூ மட்டும் முட்டாளா என்ன, அவளையும், ஏன் என்னையும் மீறிதான் இது நடந்திருக்கு. அம்மா பயப்படறதுலயும் ஒரு நியாயம் இருக்கில்லையா? இந்த ஆறு மாசத்துல, என்னை பேங்க் மோசடில, ஃபோர்ஜரி கேஸ்ல மாட்ட வைக்கற மிரட்டல்ல தொடங்கி , எத்தனை மறைமுகமான அழுத்தத்தை நான் கடந்து வந்திருக்கேன்னு உங்க யாருக்கும் தெரியாது, இருக்கற பிரச்சனைல நானும் உங்களை பயமுறுத்த வேண்டாம்னுதான் பேசாம இருந்துட்டேன்”
“அப்பா…”
“ஆனா, நாம அமைதியா ஒதுங்கி இருந்தா, விஷயம் தானே அமுங்கிடும்னு நான் நினைச்சது நடக்கலை. வேலை, மானம், மரியாதை எல்லாத்தையும் தொலைச்சுட்டு வாழவோ, குடும்பத்தோட உயிரை விடவோ எனக்கு விருப்பமில்லை. இப்ப என்ன, கல்யாணம்தானே பண்ணிக்கறேங்கறான். பிரபலமான, பாரம்பரியமான குடும்பத்துப் பையன். சரின்னு சொல்றதைத் தவிர, நமக்கு வேற வழியில்லை”
கண்ணீருடன் “ஏன்னா…” என்றாள் சீதா.
“ஹேமாக்குன்னு ஒருத்தன் இனிமேலா பொறக்கப் போறான், பாத்துக்கலாம்டீ”
அபர்ணா “அப்ப நான் அவ்வளவுதானாப்பா?”
பாட்டி “என்னடீ கண்ணே, இப்டியெல்லாம் பேசற, மலையத்தனை கஷ்டத்துக்கு கடுகத்தனை தீர்வு கூட கிடையாதா, பெருமாளே”
சில நிமிட அமைதிக்குப் பின், என்ன தோன்றியதோ, கணவனையும் மகனையும் பார்த்த அகிலா “அத்திம்பேர், சீதா, உங்களுக்கு ஹேமாவை முகுந்தனுக்குக் குடுக்க சம்மதம்னா, எப்ப சொல்றேளோ அன்னிக்கே கல்யாணத்தை வெச்சுக்கலாம்” என்றதில் பெரியவர்கள் மகிழ்ந்து நெகிழ, ஹேமா தீடீர் திருமணப் பேச்சிலும், வசீகரமான முகுந்தன் எதிரிலேயே நின்றதிலும் சங்கோஜத்தில் குறுகுறுக்க, அபர்ணாவும் முகுந்தனும் திகைத்து அதிர்ந்தனர்.
**************
சென்னையின் இதயப்பகுதியில், பரபரப்பான, பணம் படைத்த ஏரியாவில் இருந்த அந்தக் கல்யாண மண்டபத்தின் உள்ளும் புறமும் மட்டுமின்றி அந்தச் சாலை முழுவதுமே கார்கள் அணிவகுத்து நின்றன.
பிரதம மந்திரி முதல் மாநில முதல்வர்கள், கட்சியின் முக்கியப் பிரமுகர்கள், அரசியல் நண்பர்கள், அரசியல் எதிரிகள், உறவுகள் என நல்ல கூட்டம்.
சாதாரண ஏற்பாட்டுத் திருமணமாக இருந்தால் கூட இருந்திராத அளவிற்கு, வேடிக்கை பார்க்கவெனவே, அபர்ணாவின் அனைத்து உறவுகளும் திரண்டு வந்திருந்தனர்.
புருஷோத்தமனின் குடும்ப வழக்கப்படி திருமணச் சடங்குகள் நடக்க, அபர்ணாவின் வீட்டினர் மௌனமாக வேடிக்கை பார்த்தனர். ஸ்ரீநிவாஸனும் சீதாவும் தாரை வார்த்துக் கொடுக்க, திருமணம் சிறப்பாகவே நடந்தது.
வருபவர்களை மனைவிக்கு அறிமுகப் படுத்துவதும், நடுநடுவே அவளிடம் ஏதாவது பேசுவதுமாக இருந்த அன்புநேசனிடம் ஏதோ, காலம் காலமாக அபர்ணாவுடன் இணைந்து வாழ்வதைப் போன்றதொரு ஸ்வாதீனம்.
இருவருமே பொருத்தமான தோற்றத்தில் இருக்க, அன்புநேசனின் அலட்டிக்கொள்ளாத ஆளுமையும் மனைவியிடம் காட்டிய உரிமையும் இயல்பும் காண்போரை அசர அடித்ததோடு அவர்களின் காதலைச் சொன்ன செய்திகளையும் மெய்ப்பித்தது.
அபர்ணாவுமே சிரித்த முகத்துடன் திடமாத்தான் இருந்தாள். அதற்குக் காரணமும் அனபுநேசன்தான். திருமணத்தை அறிவித்த மூன்றாம் நாளே, வெளியில் போகலாம் என வந்து நின்றான்.
வேறு வழியின்றி அவனுடன் சென்றாலும், தன்மையாகத்தான் பேசினான். தங்களது குடும்பம், பாரம்பரியம், அரசியல் பின்னணி, பர்ஃபெக்ஷனிஸ்ட்டான அவனது பெற்றோர்கள் என நிறைய சொன்னான்.
எங்கும் நிற்காது ஈசிஆர் ரோடில் லா……ங் டிரைவ் சென்று வந்தனர். வழியில் எங்கும் நிறுத்தினால் கூட்டம் சேரும் என்பதால், அவன் கொண்டு வந்த சிறிய டைரி மில்க் சாக்லேட் மற்றும் தண்ணீர் பாட்டிலைக் காலி செய்ததோடு சரி.
அவளது வீட்டு வாசலில் காரை நிறுத்த, வீடே வெளியில் காத்திருந்தது.
ஒரு தலையசைப்புடன் இறங்க யத்தனித்தவளிடம் “அப்பூ, பசிக்குதுல்ல, ஸாரிமா” எனவும் திகைத்தாள்.
ஏழு மணி நேரத்துக்கும் மேலாக, அவன் சொல்வதைக் கேட்பதும், கேட்ட கேள்விக்கு பதிலுமாக, விட்டால் இறங்கி ஓடிவிடுவாள் போல் இருந்தவள் தன்னிடம் அவன் பசியென்று உரிமையுடன் சொன்னதில் இளகினாள்.
“உ…உள்ள வாங்க”
“வேணாம், மணி ஒம்போது ஆகப் போகுது. மே பி நெக்ஸ்ட் டைம்”
அதற்குள் ஸ்ரீநிவாஸன் வெளியே வந்து மரியாதை நிமித்தம் அன்புநேசனை உள்ளே வரும்படி அழைத்தார்.
அவரே “சீதா, குடிக்க ஏதாவது கொண்டு வா” எனவும், அன்புநேசன் அபர்ணாவைப் பார்த்தான்.
கிச்சனுக்குள் சென்ற சீதாவை மகள்கள் இருவரும் பின்தொடர்ந்தனர்.
ஹேமா “என்னடீ அப்பூ, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல செவன் கோர்ஸ் டின்னரா?”
“நீ வேற… ஒண்ணுமே சாப்பிடல. பயங்கரமா பசிக்கறது” என்றவள், தயக்கத்துடன் “...ம்மா, அவருக்கும் பசிக்கறதாம்” என்றதில் ஹேமா அழகிப்போட்டியில் ஜெயித்தவளைப் போல் அபிநயிக்க, சீதா சற்றே கடுப்புடன் தோசைக் கல்லை அடுப்பில் போட்டாள்.
மத்தியத் தொழில்துறை அமைச்சரின் மகன் நேசப் புருஷோத்தமன், நிதானமாக மிளகாய்ப் பொடியும் மாங்காய் தொக்கும் தொட்டுக்கொண்டு ஏழு தோசைகளும் காஃபியும் ஆன பிறகு “தேங்க்ஸ் ஆன்ட்டீ, hearty meal. அப்பூ, உனக்கு உங்கம்மா மாதிரி தோசை செய்யத் தெரியுமா?” என்றதில் விழுந்தாள் சீதா.
முப்பத்தி இரண்டு நாட்களில் முஹுர்த்தம் வைத்துவிட, அவனது வீட்டின் சார்பாக நகை, முஹூர்த்தப்புடவை எடுக்க, அம்மா, அக்காவுடன் அவனும் வந்தான்.
அவனது வீட்டினரிடமுமே இயல்பாகப் பேசினாலும், வாங்கியவை
அனைத்துமே அவனது தேர்வுதான்.
“இதுக்கு நாங்க ஏன்டா அன்பு, கடைக்கு வரணும், பொண்ணுதான் உன் இஷ்டம்னா, புடவை கூடவா?” என்றாள் அவனது அக்கா பொன்னி.
கச்சேரிகளில் முன்பு அபர்ணா உடுத்திய பாவாடை, தாவணியாகட்டும், பிறகு புடவையாகட்டும், அவளது வயதுக்கேற்ற வித்தியாசமான நிறக் கோர்வைகளும், எளிமையான பார்டர்களும் கொண்ட பட்டுப்புடவைகள், கச்சிதமான, வேலைப்பாடுடன் கூடிய ரவிக்கைகள், வழக்கமான தங்க, கல் வைத்த நகைகளைத் தவிர, டெரகோட்டா, மரம், வெள்ளி, திபெத்தியன் ஜுவல்லரி, முத்து, நவரத்தினங்கள் என அபர்ணாவின் தேர்வும், அதை அணியும் விதமும், லாகவமான உடல் மொழியும் , அடுத்த தலைமுறை கர்நாடக சங்கீதப் பாடகிகளின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்டாக பல முறை, பல பத்திரிகைகளில் வெளியாகி இருக்க,
அன்புநேசன் “அவளுக்கு எது நல்லா இருக்கும்னு எனக்குத் தெரியும்” என்றதைக் கேட்ட ஹேமா கிண்டலாகத் தலையாட்ட, சிரிக்கவா அழவா என்ற யோசனையில் அபர்ணா.
மற்றொரு நாள் அவனது கனவுக்குழந்தையான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு (Star Sports Academy) அழைத்துச் சென்றான்.
அபர்ணாவின் கல்லூரிக்கு வந்து, முதல்வரிடம் வரவேற்புக்கு அழைப்பு விடுத்து, இரண்டு மாத விடுப்பைக் கோரினான். மத்திய மந்திரியின் மருமகளுக்கு விடுப்பை வாரி வழங்கியது கல்லூரி.
பின்னால் தீயைக் கக்கியபடி வேகமெடுக்கும் போர்விமானத்தைப் போல் வாழ்க்கை வேகமெடுத்ததில், அபர்ணா பிரமிக்க, பொறாமையில் பொசுங்கியவர்கள் பலர்.
இடைப்பட்ட நாட்களில் பாட்டி ராஜலக்ஷ்மி பேத்தியின் மனதைத் தேற்றி, ஒருமுகப் படுத்த வாழ்வின் யதார்த்தத்தை, எளிமையான நடைமுறை தீர்வுகளை போதித்தார்.
“அபூ, இனிமே இவன்தான்னு ஒத்துண்ட அப்புறம் யார்கிட்டயும் அவனை விட்டுக்குடுக்காதே. அதேநேரம், உன்னோட சுயமரியாதையை அவன்கிட்ட கூட விட்டுக் கொடுத்துடாதே”
“இப்படி இருந்திருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம்னு நடக்காததைக் கற்பனை பண்ணாம, எப்படியாவது விட்டதைப் புடிக்கணும்னு கனவு காணாம, இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கோ. அதிகாரம், அநியாயம்னு போசிக்காதே. மத்தவா சொல்ற மாதிரி அதிர்ஷ்டமாவே இருக்கட்டுமே”
பாட்டை எண்ணிக் கலங்கியவளை “கச்சேரி இருக்கோ இல்லையோ சாதகத்தை விட்டுடாத அபூ. பாட்டுதான் உன்னோட அடையாளம். சங்கடம், சஞ்சலம்னு அழல்ற மனசுக்கு சங்கீதத்தை விட சந்தோஷத்தை, ஆசுவாஸத்தைத் தர சாதனம் வேற எதுவும் கிடையாது”
மகனையும் மருமகளையும் போல் ஏக்கப் பெருமூச்சு விடாமல் வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிய வைத்து, பேத்திக்குத் தைரியமளித்தார் பெரியவர்.
கல்யாண ஏற்பாடுகளை முன்னிட்டு, சீதாவின் அம்மா இங்கே வந்து தங்கியிருக்க, போக வர இருந்த முகுந்தனிடம், அரிதாகக் கிடைத்த சில நிமிடத் தனிமையில், அவன் கொடுத்த பரிசைத் திருப்பிக் கொடுத்து, கண்ணாலயே மன்னிப்பை வேண்டினாள்.
“அது உங்கிட்டயே இருக்கட்டும் அபர்ணா. அழகான கனவு மாதிரி ஒரு சின்ன பாஸ்ட் இருக்கறதுல என்ன தப்பு? நமக்குள்ள காதல்னு பெருசா எதுவும் இல்லாட்டாலும், நம்ம கல்யாணம் யாரோட நடந்தாலும், இன்னொஸன்ட்டான அந்த மொமன்ட் ஸ்பெஷல்தானே” என்றவனின் வார்த்தைகளில் கண்களில் நீர் கோர்த்துவிட முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.
அபர்ணா தயக்கத்துடன் “ஹேமாவை நீங்க…”
“ஒரு சின்ன அட்ராக்ஷனுக்காக என் லைஃபையும் என்னை நம்பி வர பொண்ணோட லைஃபையும் கெடுக்கற அளவுக்கு நான் மெச்சூரிட்டி இல்லாதவன் இல்லை அபர்ணா. மோர்ஓவர், உன் தங்கை பேசியே என்னை சரி பண்ணிடுவோ” என்று புன்னகைக்க, அபர்ணா வலியையும் நிம்மதியையும் ஒருங்கே அனுபவித்தாள்.
நடுவில் திருமணத்தை நிறுத்தச் சொல்லி அனாமதேய மிரட்டல் கால்கள் வரவும், சீதா பிஎஸ்என்எல்லில் இருந்ததால், அது ஐயாரப்பனின் சாலியமங்கலம் அக்கா வீட்டு எண் எனத் தெரிந்தது. மந்திரியின் மாப்பிள்ளையைப் பற்றி அவரிடமே சொல்வது எப்படி என ஸ்ரீநிவாஸன் தயங்கினார்.
அபர்ணாவின் திருமணம் ஒரு வாரம் என்ற நிலையில், ஹேமாவுக்கும் முகுந்தனுக்கும் வீட்டோடு நிச்சயம் செய்து தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஆகஸ்ட் இறுதி வரை இந்தியாவில் இருந்து திருமணத்தை முடித்துக் கொண்டு இருவரும் அமெரிக்கா செல்வதாக முடிவாகி இருந்தது.
நிச்சயத்துக்கு அன்புநேசன் மட்டும் வர, அதேநேரம் சரியாக மிரட்டல் அழைப்பும் வர “நான் பாத்துக்கறேன்” என்றான். என்ன சொன்னானோ, செய்தானோ தெரியாது. இதோ, கப்சிப்பென கல்யாணத்துக்கு வந்தவர்களை ஓடிஓடி உபசரிக்கிறான் ஐயாரப்பன்.
குறித்த முஹூர்த்தத்தில் அபர்ணா ஸ்ரீநிவாஸன், அபர்ணா அன்புநேசன் ஆனாள்.
சென்னையின் நகர நாகரிகத்தில் எதுவும் பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், அன்புநேசனின் கிராமத்தில், அவர்களது சொந்தங்களின் நடுவே தோற்றமும் உடல்மொழியும், பேசு மொழியும் வேறாக இருந்த அபர்ணாவை வித்தியாசமாகப் பார்த்தனர்.
சில பெரியவர்கள் “பொண்ணு பொம்மையாட்டம் இருக்குறதுல பய மயங்கிட்டான் போல”
“நம்ம பழக்கம், சம்பிரதாயம், சாப்பாடுன்னு எதுவும் தெரியாது போல. நம்ம வீட்ல கவுச்சி இல்லாம ஒருநாள் கூட ஓடாது, இந்தப் பொண்ணு என்ன செய்யும்?” என்றனர்.
பரிச்சயமில்லாத சடங்குகளுக்குத் தயங்கி நின்றவளை தன் அழுத்தமான பார்வையிலும் ‘அம்மா சொல்றதை மட்டும் செய்’ என்ற அடிக்குரலிலுமே செய்ய வைத்தான்.
ஆனால், உறவுமுறைகளுக்கு விருந்து வைத்தபோது, “மருமகளை பரிமாற சொல்லுங்க” என்றார் ஐயாரப்பனின் தாய்.
தன் காதலுக்காக, கணவனுக்காக, மனைவிக்காக என்ற ஈர்ப்பும் ஈடுபாடும் இருந்தாலே திடீரெனப் பழகுவது கடினம்.
இங்கோ அசைவது அனைத்தையும் சமைத்து வைத்திருக்க, அறைக்கு உள்ளேயே இருந்த அபர்ணாவை அழைத்துப் பரிமாறச் சொன்னார் துளசி.
அதுவரை அங்கே இல்லாத அன்புநேசன், எங்கிருந்து கவனித்தானோ தெரியாது, வேகநடையில் வந்தவன், லட்டு வைத்திருந்த பேசினைக் கையில் எடுத்து “அப்பு, ஒண்ணொண்ணா வெச்சுட்டே வா” என தன்னோடு அழைத்துச் சென்று பரிமாறிய கையோடு அறைக்கு அனுப்பிவிட, சம்மந்தி அம்மாளின் முகம் விழுந்துவிட்டது.
அன்புநேசனின் செயலில், ஐயாரப்பன் பொன்னியிடம் எகிற, அவள் நேரே தம்பியிடம் வந்து நின்றாள்.
அன்புநேசன் “அக்கா, உன் புருஷனும் மாமியாரும் தலைகீழா நின்னாலும், அபர்ணாதான் என் பொண்டாட்டி. இன்னொருவாட்டி இதுபோல பேசினா, நான் வாயை மூடிட்டு இருக்கமாட்டேன்” என்றதில் அபர்ணாவுக்குக்குள் ஏதோ ஒரு ரசாயனக் குமிழ் வெடித்தது.
***************
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் (Cape Town). பகலில் பதினேழு டிகிரியும் இரவில் ஏழு டிகிரியும் அவ்வப்போது பெய்யும் மழையும் ஊசியாகக் குத்தும் காற்றுமாக ஊரே சிலுசிலுப்பாக இருந்தது. வடக்கு கேப் டவுன் மலையுச்சிகளில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது.
அபர்ணாவும் அன்பு நேசனும் சடங்குகள் அனைத்தும் முடிந்த மறுநாளே புறப்பட்டு கேப் டவுனுக்கு வந்திருந்தனர்.
ஒரு வரவேற்பறை, பெரிய படுக்கையறை, சிறிதான கிச்சனெட், குட்டி டைனிங், ஓய்வறை, அதை ஒட்டி கப்போர்டுகளுடன் கூடிய உடைமாற்றும் அறை, பின்னால் ஒரு பால்கனி என வசதியாக இருந்த ஒரு செல்ஃப் கேட்டரிங் ஹனிமூன் கெஸ்ட் ஹவுஸில், தெளிந்த மரகதப் பச்சையில் மின்னிய கடலைப் பார்த்தபடி இருந்த அறையில் தங்கி இருந்தனர்.
கிளம்பும் முன் அன்புநேசன் “நமக்கு வேணுங்கறதை அங்க சமைச்சுக்கலாம். ஆனா, மினிமம் தேவையானதை எடுத்துட்டுப் போகணும்” எனவும் ‘சமையலா, நானா?’ எனத் திகைத்தாள்.
அவனே “வேணாம்னா சொல்லு, ஹோட்டல்ல தங்கலாம். எனக்கு பரவாயில்ல, நீதான் வெஜிடேரியன். அங்க என்ன கிடைக்கும்னு எந்த ஐடியாவும் எனக்குக் கிடையாது” எனவும் பாட்டியிடம் நோட்ஸ் எடுத்துக்கொண்டாள். அம்மா சீதா ஊரில் உள்ள பொடி வகைகள், புளிக்காய்ச்சல், ஊறுகாய், பட்சணம், புளி, அரிசி எனக் கட்டிக் கொடுத்தாள்.
ஹேமா “என்னடீ அபூ, மடிசஞ்சியாட்டம்?” எனக் கேலி செய்தாள்.
காலையில் வந்து இறங்கி கெஸ்ட் ஹவுஸை அடைந்ததும் இருவரும் குளித்து, ஒரு பாட் காஃபியும் பிரட் பட்டரும் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு ஜெட்லாக் கழிய உறங்கினர்.
அபர்ணா உறக்கம் கலைந்து எழுந்தபோது, இருட்டி இருக்க, வெளியே பலத்த காற்றும் மழையுமாக இருந்தது. நல்லவேளையாக அன்புநேசன் அங்கிருந்த எலெக்ட்ரிக் குக்கரில் வைத்திருந்த சாதம் ஆனபிறகு மின்சாரம் நின்றிருந்தது.
திட்டமிடாத கேன்டில் லைட் டின்னர். பருப்புப் பொடி, ஊறுகாய் என சாதத்தில் கலந்து முறுக்குடன் பரிமாறினாள். ம
திருமணநாள் நாள் இரவில் “டாம்ன் டயர்ட்மா, தூங்கலாம்” என்று தோளோடு அணைத்து விடுவித்தான்.
ஐந்து இரவுகளைத் தனிமையில் கழித்திருந்தாலும், வீட்டினர் உடனிருந்தனர். குலசாமிக்குப் பொங்கல், மாரியம்மனுக்கு மாவிளக்கு, உறவுகளுக்கு விருந்து, அக்கா பொன்னி வீட்டிலும், நீடாமங்கலத்தில் துளசியின் அண்ணன் வீட்டிலும் விருந்து என பிஸியாக, நாளுக்கொரு இடத்தில் உறங்கியதாலோ என்னவோ, மெலிதான அணைப்புக்கு மேல் அன்புநேசன் அபர்ணாவை நெருங்கவில்லை.
‘இங்கே எத்தனை தனிமை!’
தயக்கமும் எதிர்பார்ப்பும் சிறிது எதிர்ப்பும் பயமுமாக மனவெழுச்சியுடன் ஜன்னலருகில் நின்று வேடிக்கை பார்த்த அபர்ணா, கணவன் தன்னையே பார்ப்பது தெரிந்தும் அவன் பார்வையைத் தவிர்த்தாள். வெளியே மைனஸ் ஐந்து டிகிரி குளிரில் காற்றும் பெருமழையும் சுழன்றடித்தது.
சாக்ஸ் அணிந்திருந்த பாதங்களால் சப்தமின்றி அருகே வந்தவன் “அப்பு” என்று இரண்டு முறை அழைக்க முகத்தை மட்டும் திருப்பி நிமிர்ந்தவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
அசையாது இறுகியவளிடம் “பயப்படாதடீ” என்றவன் ஒற்றை விரலால் அவளது வரிவடிவத்தை அளக்க, நெளிந்தாள். தன்புறம் திருப்பி இறுக்கியவனின் குரல் குழைந்தது.
“அப்புக்குட்டீ, ப்ளீஸ்டா”
மெழுகு வர்த்தியின் ஒளியில் அன்புநேசனின் ஆசையும் மோகமும் அவன் கண்களில் நர்த்தனமாட, அத்தனை மென்மையை எதிர்பாராத அபர்ணா உருகித்தான் போனாள்.
*******************
அபர்ணாவின் மொபைல் ஒலிக்க, சாரங்கன்.
“மேம், அல்பா லால்வானி ஒரு கார்ப்பொரேட் லாபியிஸ்ட், தொடர்பு அதிகாரி. இப்ப ஒர்க் பண்றது விளையாட்டு வீரர்களுக்காக ஸ்பான்ஸர் பண்ற கம்பெனிக்காக”
“அதனால?”
“வரப்போற காமன்வெல்த் கேம்ஸ், ஒலிம்பிக்ஸ் ரெண்டுக்கும் யாரைத் தேர்ந்தெடுக்கணும், யாருக்கு எந்தக் கம்பெனி ஸ்பான்ஸர் பண்ணும்னு டீல் பேசுவாங்க, அதாவது தரகு வேலை மாதிரி”
“ம்… புரியுது”
“ஸார் (அன்புநேசன்) பிரைவேட்டா ஒரு ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தறதோட, அத்லெட்டிக் அஸோஸியேஷன் ஆஃப் இந்தியாவோட அமைப்பாளர்ல (convener) ஒருத்தர் இல்லையா?”
“ஆமா”
“அதுக்காகதான் கூப்பிடாமலே உங்க வீட்டு விழாக்கு வந்திருக்காங்க போல”
“ம்…”
“மேம்”
“சொல்லுங்க சாரங்கன்”
“அல்பா லால்வானி ரொம்ப ட்ரிக்கியான லேடி. ஸாரை கொஞ்சம் கேர்ஃபுல்லா…”
‘ம்க்கும்… நான் சொன்னதைக் கேட்டுட்டுதான் அவர் மறுவேலை பார்ப்பார்’
“சொல்றேன் சாரங்கன், தேங்க் யூ ஸோ மச், ட்ராக் பண்ணி வேற எந்த தகவல் கிடைச்சாலும் சொல்லுங்க”
“ஷ்யூர் மேம், குட்நைட்”
மீண்டும் அழைப்பு வர, அன்புநேசன். டெல்லி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததைத் தெரிவிக்க அழைத்திருந்தான்.
சாரங்கன் சொன்னது குறித்த யோசனையில் இருந்தவள் “ம்” என, உடனே வீடியோ காலில் அழைத்துவிட்டான்.
“என்ன ஆச்சு?”
“ஒன்னும் இல்ல, பார்த்து பத்திரமா இருங்க”
“பேசாம நீயே இங்க வந்துடேன்?”
“மறுபடியுமா, போய்த் தூங்குங்க, போங்க”
“நீ பழைய அப்புவே இல்லடீ”
‘அடங்க மாட்டானே’
“குட்நைட் நேசா” என்றவள் உறங்க வெகுநேரம் பிடித்தது.